முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் பெண் பத்திரிகையாளர் மெல் குணசேகர கொலை

ஞாயிற்றுக்கிழமை, 2 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, பிப். 3 - இலங்கையின் குறிப்பிடத்தக்க பெண் பத்திரிகையாளர் மெல் குணசேகர (வயது 40) குத்திக் கொல்லப்பட்டார்.கொழும்புவில் உள்ள அவரது இல்லத்தில், ஆயுதத்தால் குத்தப்பட்ட நிலையில் மெல் குணசேகரவின் உடல்  கண்டெடுக்கப்பட்டது.

மெல் குணசேகரன் கொல்லப்பட்டது தொடர்பான தகவலை செய்தியாளர்களிடம் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரஜித் ரோஹனா வெளியிட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் போர்க் காலத்தில், அங்கிருந்தபடி சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பிக்கு செய்தியாளராக மெல் குணசேகர பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெல் குணசேகர கொல்லப்பட்டதற்கான பின்னணி விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை என்று இலங்கையைச் சேர்ந்த பத்திர்கையாளர்கள் கூறியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago