முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மொரானிக்கு ஜாமீன் மறுப்பு

திங்கட்கிழமை, 23 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே. 24  ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இயக்குனர் மொரானிக்கு ஜாமீன் வழங்க டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு மறுத்துவிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானியும் சேர்க்கப்பட்டுள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியதில் சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி சம்பந்தப்பட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அதனால் மொரானியும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படி தாம் கைது செய்யப்பட்டால் தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மொரானிக்கு ஜாமீன் கொடுக்க முடியாது என்று நீதிபதி ஷைனி கூறினார். உங்களுக்கு உடல்நிலை சரியாகத்தான் இருக்கிறது. நல்ல ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் அதனால் உங்களுக்கு முன்ஜாமீன் தரமுடியாது என்று நீதிபதி ஷைனி கூறினார். மேலும் இன்றும் கோர்ட்டில் ஆஜராகும்படி மொரானிக்கு உத்தரவிட்டார். இந்த மனுதாரின் உடல்நிலை சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. மருத்துவ அடிப்படையில் யாருக்கும் முன்ஜாமீன் வழங்கப்படுவதில்லை. அதனால் இந்த மனு தகுதியற்றது. மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி சைனி மேலும் கூறினார். முன்னதாக மொரானி சார்பாக மூத்த வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா ஆஜராகி வாதாடினார். நீதிமன்ற காவலில் ரைக்கும்படி மொரானியின் உடல்நிலை சரியில்லை. காவலில் வைக்கப்படும் இடத்தின் சுற்றுப்புறசூழலை மொரானியால் தாங்கமுடியாது என்று கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்