சிரியாவில் ராணுவ ஹெலிகாப்டர் குண்டு வீச்சில் 121 பேர் பலி

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

டமாஸ்கஸ், பிப்.4 - சிரியாவில் ராணுவ ஹெலிகாப்டர்  குண்டு வீசியதில் 121 பேர் இறந்தனர். சிரியாவில் அதிபர் அல் ஆசாத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறர்கள். சுமார் 1 லட்சம் பேர் வரை உயிரிழந்தும் போராட்டம் நீடிக்கிறது.

மக்களுக்கு ஆதரவாக புரட்சி படையும், அரசுக்கு ஆதரவாக ராணுவமும் ஈடுபட்டு வருகின்றன.

அலெப்போவில் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ ஹெலிகாப்டர்கள் குண்டு வீசி வருகிறது. இதில் 121 பேர் உயிரிழந்துள்ளனர். அஸ்ரா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.                   

இதை ஷேர் செய்திடுங்கள்: