முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஊழல்: பார்லி.யில் எழுப்புவோம்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.4 - ஹெலிகாப்டர்  ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா  நிருபர்களிடம் கூறியதாவது: 

ஹெலிகாப்டர்  ஊழல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது. பணம்  பெற்றவர்கள் யார் என்பதை  காட்டுவதற்கு விரிவான ஆ தாரங்களும் உள்ளன. ஹெலிகாப்டர்   ஊழல் விவகாரத்தை நிச்சயம் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். ஏதாவது ஒரு விளக்கத்தை அளித்துவிட்டு  மத்திய அரசு தப்பித்துக்கொள்ள  அனும திக்க மாட்டோம். போபர்ஸ் பீரங்கி ஊழலைப் போலவே ஹெலிகாப்டர் ஊழலும் நடைபெற்றுள்ளது என்றார்.

வி.ஐ.பி.க்ளின் பயணத்துக்காக இத்தாலி யைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து  ரூ. 3,600 கோடி மதிப்பில் 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க மத்தி. அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஆர்டரைப் பெறுவத ற்கதாக அந்த நிறுவனம் இந்திய தரப்புக்கு ரூ. 360 கோடி கமிஷன்  கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இது தொடர்பாக  வழக்குப் பதிவு செய்த இத்தாலி போலீஸார்  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன அதிகாரிகள் சிலரையும்,  இந்த பேரத்தில்   இடைத் தரகர்களக  செயல்பட்ட சிலரையும் கைது செய்தனர். 

இதுதொடர்பான வழக்கு இத்தாலி கோர்ட்டில்  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  ஹெலிகாப்டர் பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட  கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் புல்லட் என்பவருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதத் தின் நகலை இத்தாலி கோர்ட்டில் அந்நாட்டு போலீஸார்  சமீபத்தில் சமர்ப்பித்தனர்.                  

      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்