முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் டிவி தொடர்பான ஸ்பெக்ட்ரம் உரையாடல்கள்!

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2014      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை.பிப்.5 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அண்மையில் வெளியான கலைஞர் டிவி தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஏற்கெனவே அரசியல் தரகர் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் சேர்க்கப்பட்டு அது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கலைஞர் டிவி தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியானது. 

ஒரு இணையதளத்தில் தி.முக,தலைவர் கருணாநிதியின் குடும்பம் குறித்து புதிய தகவல்கள் வீடியோ உரையாடல்களாக வெளியிடப்பட்டுள்ளது.இதில் முன்னாள் போலீஸ் அதிகாரியும் கலஞர் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரியான சரத்ரெட்டியும் விவாதிப்பதாக உள்ளது.,கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகியான சரத் ரெட்டி மற்றும் காவல்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோர் இடையேயான இந்த தொலைபேசி உரையாடலில், சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய வருவதற்கு முன்பாகவே தாம் 100க்கும் மேற்பட்ட ஆவணங்களில் தான் பின் தேதியிட்டு கையெழுத்திட்டு வருவதாக சரத் ரெட்டி கூறுவது பதிவாகி இருக்கிறது. 

  கருனாநிதியின் மனைவி தயாளு அம்மாள் குறித்து சரத்ரெட்டி பேசுகையில்,அம்மாவுக்கு ( தயாளு அம்மாள் )தமிழும் , ஆங்கிலமும் தெரியாது. அதனால் அவரை இயக்குனர் பதவியிலிருந்து நீக்கிவிடலாமா என்று நினைகிறோம்;.......பெரியவருக்கு (கருணாநிதி) எல்லாம் தெரியும்.......கனிமொழியிடம்  சொல்லப்பட்டுள்ளது.அவருக்கு இது தெரியும்.அவர் பெரியவரிடம் கூறிவிடுவார்........இப்படி உரையாடல்கள் சொல்லுகின்றன.

(ஆனால், இந்த உரையாடலில் பேசுவது ஜாபர் சேட், சரத் ரெட்டி தானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.) மேலும் சிபிஐ குற்றம்சாட்டுவது போல ஸ்பெக்ட்ரம் ஊழலில் பணபரிவர்த்தனை நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் உரையாடல்களும் இதில் இடம்பெற்றிருப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. 

பிரசாந்த் பூஷண்கருத்து :

இதையொட்டி இந்த உரையாடல் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இதன் விளைவாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷனும் கருத்துத்தெரிவித்துள்ளார்.2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் கூறியபோது, 2ஜி ஊழல் குறித்து திமுக தலைவர் கருணாநிதிக்கு முழு விபரமும் தெரியும் என்று தெரிவித்தார்.

தற்போது இந்த தொலைபேசி உரையாடலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்பெக்ட்ரம் வழக்கின் நேரடி விவரங்களைக் கொண்ட தொலைபேசி உரையாடல் இது என்பதால் உச்ச நீதிமன்றமும் இதை விசாரணைக்கு உடனே எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்