முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் ஆக்லாந்தில் இன்று துவக்கம்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

வெல்லிங்டன், பிப். 6 - இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் நம்பர் ஒன் இடத்தை இழந்தது. மோசமான  தொடக்கம், வெளிநாட்டில் விளையாடிய போதிய அனுபவம் இல்லாத  இளம்  வீரர்கள் ஆகியவை அணியின் சரிவிற்கு காரணமாக அமைந்தது. 

இந்நிலையில் ஒரு நாள் போட்டி தொடரை தொடர்ந்து நியூசிலாந்து  அணிக்கு எதிராக இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளது.  முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை3.30 மணிக்கு துவங்கும் ஆட்டத்தை சோனி சிக்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. புஜாரா, ஜாகீர்கான் ஆகியோரின் வருகை இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். பயிற்சி ஆட்டத்தில் புதுமுக  வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டே சிறப்பாக செயல்பட்டார். இதனால் இன்றைய  ஆட்டத்தில் இஷாந்த் சர்மாவை கண்டு கொள்ளாமல் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் பந்து வீச்சை பலப்படுத்தலாம். ஷாமி ஸ்விங் நெருக்கடி கொடுக்கும் வகையில் இருக்கும். இந்திய அணி கடந்த 2009-ல் டோனி தலைமையில் நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. சச்சின் , டிராவிட், சேவாக், காம்பீர், லட்சுமண், ஜாகீர்காண், ஹர்பஜன்சிங், என ஒரு வலுவான படையாக மிரட்டியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் காம்பீர் சுமார் 2 நாட்களுக்கு  மேல் நிலைத்து நின்று பேட் செய்து அணிக்கு உதவினார். ஆனால் தற்போதைய அணியில்  உள்ள வீரர்களில் பெரும்பாலானோர் இந்திய மண்ணில்  மட்டுமே சிறப்பாக ஆடுகிறவர்களாக உள்ளனர். கோஹ்லி, டோனி, புஜாரா ஆகியோர் தவிர மற்றவர்கள் பார்மில் இல்லை. ஷிகார் தவான் , முரளி விஜய் நல்ல துவக்கம் அமைத்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும். ரோகித் சர்மா, ரகானே, ஜடேஜா ஆகியோரும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தால் வலுவான ஸ்கோரை குவிக்கலாம். பேட்டிங்கில் சிறப்பாக ஆடி அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே பந்து வீச்சில் நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை  ஒருநாள்  போட்டி தொடரை வென்ற குதூகலத்துடன் டெஸ்ட் தொடரை எதிர்கொள்கிறது. 

கேப்டனாக மெக்குலம் இருந்தாலும் பேட்டிங்கில் அணியை வழிநடத்துபவராக ராஸ் டெய்லர் தான் இருகிறார். ஒருநாள் போட்டி தொடரில் அடுத்தடுத்து 2 சதங்கள் விளாசிய அவர் நல்ல பார்மில்  உள்ளார். புளூட்டன், ரூதர் போர்டு, வில்லியம்சன், ஆண்டர்சன், ஜெசி ரைடர், என பேட்டிங் வரிசை பலமாகவே உள்ளது. பந்து வீச்சில் சவுதி, பிரேஸ்வெல், பவுல்ட் சவாலாக இருப்பார்கள்.  சுழலில் அசத்த சோதி தயாராக உள்ளார். எல்லா வகையிலும் இந்திய அணிக்கு நியூசிலாந்து வீரர்கள் நெருக்கடி கொடுக்கக்கூடும். மொத்தத்தில் ஒருநாள் தொடரை போலவே டெஸ்ட் தொடரும் இந்திய அணிக்கு கடுமையான சவால்தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago