முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் மொரானி ஜாமீன் மனு தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,மே.- 25 - டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கமான ஜாமீன் மனுவை நேற்று தாக்கல் செய்தார். ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் ரூ.214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் கரீம் மொரானி முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டில் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை நேற்றுமுன்தினம் சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது மொரானியின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி சைனி நிராகரித்துவிட்டார். மேலும் இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் மொரானிக்கு உத்தரவிட்டார். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சிரித்தார். இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் மறுக்கப்பட்ட மொரானி நேற்று பாட்டியாலா சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜரானார். அப்போது வழக்கமான ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவை நீதிபதி சைனி பதிவு செய்து கொண்டு மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார். கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும் ஜாமீன் மனுவை நீதிபதி சைனி தள்ளுபடி செய்துவிட்டார். அதனால் கனிமொழி டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்