முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீட்டர்சன் பலிக்கடா: முன்னாள் வீரர்கள் கண்டனம்

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், பிப். 7 - ஆஷஸ் டெஸ்ட் தொடர் தோல்விக்கு பீட்டர்சன் பலிக்கடா ஆக்கப்பட்டு விட்டார் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். 

இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கெவின் பீட்டர்சன். இங்கிலாந்து அணியின் டெண்டுல்கர் என்று வர்ணிக்கப்பட்டவர். 

கே.பி. என்று அழைக்கப்படும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சோபிக்கவில்லை. 

இங்கிலாந்து 5 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனதால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அணியை மாற்றி அமைக்க முடிவு செய்தது. 

முதல் கட்டமாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஆன்டி பிளவரை நீக்கியது. அடுத்தபடியாக தற்போது பீட்டர்சன் நீக்கப்பட்டு உள்ளார். 

மே.இ. தீவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பையில் உங்களது பெயரை சேர்க்கவில்லை என்று பீட்டர்சனிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சூசமாக தெரிவித்து விட்டது. 

இதனால் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்த கெவின் பீட்டர்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தெரிய வருகிறது.  

ஓய்வு முடிவை அவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் இங்கிலாந்து அணியில் இனிமேல் ஆட முடியாது என்பதையும் அவர் ஒப்புக் கொண்டு உள்ளார். 

பீட்டர்சன் நீக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர்கள் தெரிவித்தத கருத்து வருமாறு _ 

மைக்கேல் வாகன் (இங்கிலாந்து முன்னாள் கேப்டன்) : தலை சிறந்த வீரரின் முடிவு இப்படி அமைந்தது வருத்தம் அளிக்கிறது. இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை 0_5 என்ற கணக்கில் இழந்ததற்கு பீட்டர்சன் பலிகடா ஆக்கப்பட்டு நீக்கப்பட்டு உள்ளார். 

ஸ்டூவர்ட் ( முன்னாள் கேப்டன்) : வெற்றி பெற்றால் எந்த பிரச்சினையும் இல்லை. தோல்விஅடைந்தால் அதற்கு பீட்டர்சனை தான் குறை சொல்கிறார்கள். அவரை நீக்கியதில் நியாயம் இல்லை. 

வார்னே (ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்) : பீட்டர்சன் நீக்கப்பட்டது என்னைப் பொறுத்தவரையில் அவமதிப்பாக கருதுகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கசாப்பு கடையாக மாறிவிட்டது. 

மார்க் பவுச்சர் ( தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ) : பீட்டர்சனை நீக்குவதற்கு இது சரியான நேரமில்லை. அவரது நீக்கம் விளையாட்டிற்கு மோசமான நாளாக அமைந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்