முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய கேபினட் செயலாளராக அஜீத்குமார் ஜேத் நியமனம்

புதன்கிழமை, 25 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே. - 25 -  மத்திய கேபினட் செயலாளராக அஜீத்குமார் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துவிட்டார்.
கேபினட் செயலாளராக இருக்கும் கே.எம்.சந்திரசேகர் அடுத்தமாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அதனையொட்டி புதிய மத்திய கேபினட் செயலாளராக அஜீத்குமார் சேத் நேற்று நியமிக்கப்பட்டார். இவர் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டுவிட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 1974-ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு பெற்றவர் சேத். இதற்கு முன்பு கேபினட் செயலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் செயலாளராகவும் கேபினட் செயலக ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். வருகின்ற ஜூன் 13-ம் தேதி வரை கேபினட் செயலகத்தில் சிறப்பு பணி அதிகாரியாக பணியாற்றுவார். ஜூன் 14-ம் தேதி கேபினட் செயலாளராக பதவி ஏற்பார். இந்த பதவியில் சேத் இரண்டு ஆண்டுகள் இருப்பார். கடந்த 1951-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24- ம் தேதி பிறந்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்