முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளுனர் பரிந்துரை நிராகரிப்பு கர்நாடகாவில் பா.ஜ.க கொண்டாட்டம்

புதன்கிழமை, 25 மே 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர், மே.- 25 - கர்நாடகா அரசை கலைக்கக்கோரி ஆளுனர் அனுப்பிய பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளதை கர்நாடக மாநிலம் முழுவதும் பா.ஜ.க. வினர் உற்சாகமாக கொண்டாடினர். நிராகரிக்கப்பட்ட செய்திகள் வெளியான உடன் முதல்வர் எடியூரப்பாவின் இல்லத்திற்கு முன்பு கூடிய பா.ஜ.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் உள்துறை அமைச்சர் அசோக் தலைமையில் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அப்போது ஆளுனர் பரத்வாஜ்-க்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநிலம் முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்