அலெப்போவில் போர்: சிரியாவை விட்டு வெளியேறும் மக்கள்

Image Unavailable

 

டமாஸ்கஸ்,பிப்.8 - சிரியாவின் அலெப்போ பகுதியில் அதிபர் அஸாத்தின் படைகள் முன்னேறி வருகின்றன. இதை தடுக்கும் வகையில் அந்தப் பகுதியில் மிகப் பெரிய போர் தொடுக்கப்படும் என்று அரசு எதிர்ப்புப் படைகள் அறிவித்துள்ளன. போர் பயத்தால் வேறு இடத்திற்கு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

சிரியாவின் பாரம்பரிய நகரமாகவும் வர்த்தக நகரமாகவும் விளங்கிய அலெப்போ உள் நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெரும்பாலான இடங்களை அதிபர் அஸாத்தின் படைகள் தற்போது தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளன.

இதனிடையே, அரசு எதிர்ப்புப் படைகளின் கூட்டுக் குழுவான இஸ்லாமிய முன்னணி சார்பில்  எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அலெப்போவில் முகாமிட்டுள்ள அரசுப் படை கள், அரசு அதிகாரிகள், எல்லை யோரங்களில் வசிக்கும் மக்கள் 24 மணி நேரத்துக்குள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட வேண்டும் அந்த நகரம் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தப் போகிறோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அலெப்போ மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர்.

ஐ.நா. அகதிகள் அமைப் பைச் சேர்ந்த பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அமின் அவாத் நிருபர்களிடம் கூறியதா வது: சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரால் ஏற்கனவே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், லெபனான், துருக்கி உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். தற்போதைய புள்ளிவிவரப்படி 35 லட்சம் மக்கள் இடம் பெயர்ந் துள்ளனர். 2014 இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 65 லட்சமாக உயரும்.

8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்தோ பிரிந்தோ தவிக்கின்றனர். போரால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளின் நல்வாழ்வுக்காக மிகப் பெரிய தொகையை கோரி யுள்ளோம்.

இப்போதைய நிலையில் வெளிநாடுகளில் வசிக்கும் அகதிகள் மறுவாழ்வுக்காக ரூ.14,400 கோடியும் உள்நாட்டுக் குள் இடம்பெயர்ந்துள்ள மக்க ளுக்காக ரூ.25,200 கோடி நிதி யுத வியும் தேவைப்படுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ