வளைகுடா நாடுகளின் சிறைகளில் 3500 இந்தியர்கள் தவிப்பு

Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.8 - வளைகுடா நாடுகளின் சிறைகளில் 3500 இந்தியர்கள் அடைப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாட்டில் சிறை பட்டிருக்கும் இந்தியர்கள் குறித்து விவரங்களை மத்திய அமைச்சர் வயலார் மாநிலங்களவையில் வெளியிட்டார். வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய துதரகங்கள் அளித்த புள்ளிவிவரத்தின் படி அந்நாட்டு சிறைகளில் மொத்தம் 3497 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளர். அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் உள்ள ரியாத சிறையில் 1400 இந்தியர்கள் உள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ஜக்கிய அரபு குடியரசு நாட்டில் 1025 இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவின் ஜெட்டா சிறையில் 568 இந்தியர்கள் தவித்து வருகின்றனர். இது தவிர குவைத்தில் 250ட ஓவன் நாட்டில் 106, கத்தாரில் 72, பஹ்ரைமில் 76 இந்தியர்கள் சிறைப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் விசா முறைகேடு தொடர்பான குற்றங்களுக்காக கைதானவர்கள். போதை மருந்து, கொலை, பலாத்காரம்,ஆகிய குற்றங்கலுக்காக கைதானவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சட்ட உதவி கிடைக்க அங்குள்ள இந்திய துதரகங்கள் உதவி வருகின்றனர். வழக்கை விரைந்து நடத்தவும், தண்டனையை குறைப்பது தொடர்பாகவும் அந்நாட்டு வெளியுரவு அமைச்சகங்களுக்கு இந்திய துதரகம் வாயிலாக தெடர்ந்து கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு வயலார் ரவி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ