மனநலம் பாதித்தவரை கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை

Image Unavailable

 

ஹூஸ்டன், பிப்,8 - அமெரிக்காவில் மனநலம் பாதித்தவரை திருமண ஆசைகாட்டி கொன்ற பெண்ணு க்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த லூயிஸ்பட்டி  முஸ்ஸோ என்ற மனநலம் பாதிக்கப் பட்டவர்  தனது பெயரில் பெரிய தொகைக்கு காப்பீடு செய்திருந்தார், அவரைக் கொலை செய்து அந்தத்  தொகையை அடைய  சூசன் பாஸோ என்ற பெண்  திட்டமிட்டார். இதற்காக அவரை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி னியூஜெர்ஸி நகருக்கு வரச்சொன்னார். அதை நம்பி அங்கு வந்த முஸ்ஸோவை தனது கூட்டாளிகள் பேருடன் சேர்ந்து அவரைக் கொன்றனர். இதில் அந்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ