2 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெற்றியின் விளிம்பில் பாகிஸ்தான்

புதன்கிழமை, 25 மே 2011      விளையாட்டு
pak 6

செயின்ட் கிட்ஸ், மே. - 25 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக செயின்ட் கிட்ஸ் தீவில் நடைபெற்று வரும் 2 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4 - வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் நிலை யில் உள்ளது. 4- வது நாளன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற 427 ரன் என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் ஆட்ட நேர முடிவில், 53 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்னை எடுத்து திணறி வருகிறது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 297 ரன்னை எடுக்க வேண்டி உள்ளது. இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும். எனவே இந்தப் போட்டி யில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா தலைமையில் மேற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் சம்மி தலைமையிலா  ன அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.மே.இ.தீவு மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 2 போட்டிக ள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் 2 - வ து டெஸ்ட் செயின்ட் கிட்ஸ் தீவில் பசட்டரே நகரில் உள்ள வார்னர் பார்க்கில் கடந்த 20 -ம்தேதி துவங்கியது. முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் இன்னிங்சைத் துவக்கிய பா கிஸ்தான் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும், இழந்து 272 ரன் னை எடுத்தது. அந்த அணி சார்பில் 3 வீரர்கள் அரை சதம் அடித்தனர்.  அசார் அலி அதிகபட்சமாக 196 பந்தில் 67 ரன்னை எடுத்தார். தவிர, உமர் அக்மல் 88 பந்தில் 55 ரன்னையும், தன்வீர் அகமது 96 பந்தில் 57 ரன்னையும், எடுத்தனர். கேப்டன் மிஸ்பா 25 ரன்னையும், சயீத் அஜ்ம ல் 23 ரன்னையும் எடுத்தனர். ராம்பால் மற்றும் பிஷூ தலா 3 விக்கெ ட்டையும், சம்மி 2 விக்கெட்டையும் எடுத்தனர். பின்பு முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி 83.5 ஓவரில் 223 ரன் னை எடுத்தது. அந்த அணி சார்பில், சாமுவேல்ஸ் 124 பந்தில் 57 ரன் னையும், ராம்பால் 77 பந்தில் 32 ரன்னையும், ரோச் 103 பந்தில் 29 ரன் னையும், பிராவோ 24 ரன்னையும், சர்வான் 20 ரன்னையும் எடுத்தனர். மொகமது ஹபீஸ் மற்றும் சயீத் அஜ்மல் தலா 3 விக்கெட்டையும், அப் துர் ரெஹ்மான் 2 விக்கெட்டையும், வகாப் ரியாஸ் மற்றும் தன்வீர் அகமது தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்பு 2 -வது இன்னிங்சை ஆடிய பாக். அணி 112.2 ஓவரில் 6 விக்கெட் டை இழந்து 377 ரன்னை எடுத்து டெக்ளேர் செய்தது. அந்த அணி சார் பில், கேப்டன் மிஸ்பா மற்றும் டெளபீக் உமர் இருவரும் சதம் அடித் தனர்.
துவக்க வீரராக இறங்கிய டெளபீக் உமர் 314 பந்தில் 135 ரன்னை எடுத் த நிலையில் ரன் அவுட்டானார். கேப்டன் மிஸ்பா 141 பந்தில் 102 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். தவிர, அசார் அலி 53 ரன்னையும், மொகமது ஹபீஸ் 32 ரன்னையும், உமர் அக்மல் 30 ரன்னையும் எடுத்தனர்.மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில், பிஷூ 149 ரன்னைக் கொடுத் து 2 விக்கெட் எடுத்தார். தவிர, கேப்டன் சம்மி, வேகப் பந்து வீச்சாளர் கள் ராம்பால் மற்றும் ரோச் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது இன்னிங்சில் 427 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி வைத்தது. பின்பு களம் இறங்கிய அந்த அணி 4 -வது நாள் ஆட்ட நேர முடிவில் 53 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்னை எடுத்து இருந்தது. மே.இ. தீவு அணி தரப்பில், ஆல்ரவுண்டர் பிராவோ 144 பந்தில் 50 ரன் னை எடுத்து ஆட்டம் இழந்தார். துவக்க வீரர் சிம்மன்ஸ் 57 பந்தில் 24 ரன்னை எடுத்தார். பிரத் வெயிட் மற்றும் சர்வான் இருவரும் பூஜ்யத்தி ல் ஆட்டம் இழந்தனர். நாஷ் 30 ரன்னுடனும், பாக் 7 ரன்னுடனும் கள த்தில் உள்ளனர். மே.இ.தீவு அணி வசம் தற்போது 5 விக்கெட்டுகள் உள்ளன. இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும். எனவே இதில் வெற்றி பெற பாகிஸ் தானிற்கு அதிக வாய்ப்பு உள்ளது. முன்னதாக நடந்த முதல் டெஸ்டில் மே.இ.தீவு வெற்றி பெற்றது.
 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: