முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளுக்கான நோபல் பரிசு: மலாலாவின் பெயர் பரிந்துரை

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், பிப். 10 - பாகிஸ்தானில் குழந்தைகள் கல்விக்காக போராடி தலிபான்களால் 2012 ம் ஆண்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மலாலா யூசப்ஸாய், குழந்தைகளுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டு உள்ளார். 

இவரோடு அமெரிக்காவின் ஜான் உட் (16) என்பவரும், நேபாளத்தைச் சேர்ந்த  இந்திரா ரனமாகரும் இந்த விருத்துக்கு பரிந்துரைக்கப் பட்டு உள்ளனர். 

10 நாடுகளைச் சேர்ந்த லட்சக் கணக்கான குழந்தைகளின் படிப்புக்கு ஜான்  உட் உதவி வருகிறார். நேபாளத்தில் குழந்தைகள் கல்விக்காக இந்திரா ரனமாகர் போராடி வருகிறார். 

ஒவ்வொரு வருடமும் உலக அளவில் 15 சிறுவர்கள், குழந்தைகளுக்கான நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டு அவர்களில் 3 பேரை தேர்வு செய்து சுவீடனைச் சேர்ந்த அமைப்பு நோபல் பரிசு வழங்கி வருகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தானில் குழந்தைகள் கல்விக்காக மலாலா யூசப்ஸாய் தனது 11 _வது வயது முதல் போராடி வருகிறார். 

இதனால் அவரைக் கொன்று விட்டால் இந்தப் போராட்டம் முடிவடையும் என்று நினைத்து தலிபான்கள் அவர் மீது 2 முறை தாக்குதல் நடத்தினர். 

அதன் பின் மீண்டெழுந்த அவர் தற்போது உலக அளவில் குழந்தைகளின் கல்விக்காக போராடி வருகிறார் என  நோபல் பரிசு வழங்கும் அமைப்பு தெரிவித்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago