முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்லாந்து டெஸ்ட்: நியூசி., இந்திய அணியை வீழ்த்தியது

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஆக்லாந்து, பிப். 10 - இந்திய அணிக்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 40 ரன் வித்தியாசத்தில் வெறி பெற்றது. 

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து ணி 1_ 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மெக்குல்லம் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 

போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 

ஒரு நாள் தொடர் முடிவடைந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் கடந்த 6_ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிந்தது. 

இந்த முதல் டெஸ்டில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 503 ரன்னைக் குவித்தது. 

நியூசிலாந்து அணி தரப்பில் கேப்டன் மெக்குல்லம் மற்றும் வில்லியம்சன் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்தனர். மெக்குல்லம் இரட்டை சதமும், வில்லியம்சன் சதமும் அடித்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 202 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இந்திய அணியை பாலோ ஆன் ஆட விடாமல் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 2_வது இன்னிங்சில் 105 ரன்னில் சுருண்டது. 

எனவே இந்திய அணி 2_வது இன்னிங்சில் 407 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை நியூசிலாந்து அணி நிர்ணயித்தது. 

ஆனால் அடுத்து ஆடிய இந்திய அணி 2_வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 366 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இதனால் நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1 _ 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

இந்திய அணி தரப்பில் ஷிகார் தவான் ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடினார். 115 ரன் எடுத்த அவர் ஆட்டம் இழந்தார். புஜாரா 23 ரன்னிலும், கோக்லி 15 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

முன்னதாக இந்தியஅணி ஒரு நாள் தொடரை 0 _ 4 என்ற கணக்கில் இழந்தது. எனவே டெஸ்டில் சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்டிலு ம் தோற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago