முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் வளர்ச்சிக்கு ரூ.1,869 கோடி அமெரிக்கா நிதியுதவி

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப்.11 - ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்காக ரூ.1,869 கோடி நிதியை அம்மெரிக்கா வழங்க முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானை ஒட்டி அமைந்திருக்கும் ஆப்கானிஸ்தான், ராஜாங்க ரீதியில் அம்மெரிக்காவுக்கு முக்கிய இடமாக உள்ளது. இதனால் அந்நாட்டின் வளர்ச்சிக்குநிதியுதவி அளித்து அமெரிக்கா உதவி வருகிறது. தற்போது அதன் வழர்ச்சிக்காக ரூ.1,869 கோடி நிதி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த நிதி சர்வதேச வளர்ச்சி ஆணையத்தின் மூலமாக வழங்க ஏர்பாடு செய்து வருகிறது. பல கட்டங்களாக இந்த நிதி ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட உள்ளதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் இறுதியில் உலக வர்த்தக அமைப்பில் ஆப்கானிஸ்தான் இணைகிறது. இந்நிலையில், நிதி  நெருக்கடியை சமாளிக்கும் பொருச்சு அந்நாட்டுக்கு முதல் கட்டமாக ரூ.479 கோடியை அமெரிக்கா வழங்குகிறது. உலக வற்த்தக மையத்தின் விதிமுறைகளை பின்பற்றினால் அடுத்த 5 ஆண்டுகளுக்குஆப்கன் பொன்ற நாடுகளின் மொத்த வளரிச்சி 20 சதவீதத்தை எட்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.மேலும் மத்திய ஆசியாவில் இந்தியா உள்ளிட்ட நாடுகளோடு வர்தக உறவையும் மேம்படுத்தி கொள்ள ஆப்கனுக்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் இரணடாவது கட்டமாக ரூ.573 கோடி வழங்கப்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. ஆப்கனின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்வி உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆப்கனில் வேளாண்மையை மேம்படுத்தவும், சுமார் 4 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையிலும், சுமார் ரூ.747 கோடியில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நவீன தொழிவ்நுட்பத்தை  பயன்படுத்தி கோதுமை உள்ளிட்ட 20 பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இருதரப்பு ஒப்பந்தங்கள் நிறைவேறியதும் இந்த ஆண்டு இறுதியில் ஆப்கானில் நிறுத்தப்பட்டுள்ளது 50 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் நாடு திரும்ப உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதே நேரத்தில் 2015-ம் ஆண்டு வரை பத்தாயிரம் வீரர்கள் ஆப்கானில் தங்கியிருந்த ஆப்கன் படைகளுக்கு பயிற்ச்சி அளித்து விட்டு அதன்பிறகே நாடு திரும் கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்