ரஷ்ய தேவாலையத்தில் துப்பாக்கிசூடு: 2 பேர் பலி

Image Unavailable

 

மாஸ்கோ, பிப்.11 - ரஷ்யாவில் தேவாலையத்துக்குள் நுழைந்த மர்ம ஆசாமி துப்பாக்கியால் சுட்டதில் கன்னியாஸ்திரி, நிர்வாகி ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கடை நகரம் சஹாலின் . இங்குள்ள தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தான். கண்முடித்தனமாக சரமாரியாக சுடத்தொடங்கினான். இதனாள் அங்கிருந்தவர்கள் அலரி அடித்துக் கொண்டு ஓடினர். இந்த சம்பவத்தில் தேவாலயத்தில் இருந்த கன்னியாஸ்திரியும், தேவாலய நிர்வாகியும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விராந்து சென்று மர்ம நபரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். விசாரனையில் அந்த நபர் தனியார் செக்யூரிட்டி நிறுவனர் ஒன்றில் வேலை செய்து வருவது தெரியவந்தது. நிறுவனத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவன் எதறகாக சுட்டான் என போலீஸைர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ