கலிபோர்னியா ஆளுநர் தேர்தலில் அமெரிக்க இந்தியர் போட்டி

Image Unavailable

 

வாஷிங்டன், பிப். 11 - கலிபோர்னியா ஆளுநர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் துஷ்கர் கேஷ்கரி குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். 

தற்போது ஆளுநராக இருக்கும் ஜெரி பிரௌன் என்பவரை எதிர்த்து கேஷ்கரி களம் இறங்குவார் என தெரிகிறது. இந்த ஆண்டில் நடக்கும் இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றி பிரௌன் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 

வேலைவாய்ப்புகளை உருவாக் குவது, தரமான கல்வி வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்து ஆதரவை அவர் சேகரித்து வருகிறார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரான கேஷ்கரி (40) ஜம்மு காஷ்மீரிலிருந்து குடிபெயர்ந்த இந்திய தம்பதிக்கு பிறந்தவர். 2008ல் அமெரிக்காவில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்ட போது வங்கிகள் தொய்வடைந்தன. அப்போது நெருக்கடியிலிருந்து மீள முக்கியத் திட்டத்தை வகுத்துக் கொடுத்து சிறப்பான இடம் பெற்றார். 

அமெரிக்காவில் பல துறைகளி லும் சிறப்பாக பங்காற்றி முக்கியத்துவம் பெற்றுள்ள இந்தியர்கள், அரசிய லிலும் தீவிரம் காட்டவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் கேஷ்கரி. 

இந்திய வம்சாவளியினர் குடும் பங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பல துறைகளிலும் வெற்றி கண்டுள்ளதால் அவர்க ளுக்கு அரசியலிலும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. 

‘ஆளுநர் பதவிக்கு போட்டி போடப்போவதாக அறிவித்தபிறகு கடந்த இரு வாரங்களில் கேஷ்கரி சுமார் 9 லட்சம் டாலர் நிதி திரட்டியுள்ளார். இந்த பதவிக்கு அவர் போட்டி போடப்போவதாக அறிவித்துள்ளது எங்களை திகைப் பில் ஆழ்த்தியது’ என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். 

ஆளுநர் பிரௌவுனுடன் நேரடியாக மோதுவதற்கு முன்னர் கட்சியில் முதல் கட்டமாக நடக்கும் தேர்தலில் கட்சியின் மற்றொரு போட்டியாளரான டிம் டானலி என்பவரை அவர் எதிர்கொண்டு வெற்றி பெற்றாக வேண்டும். 

இப்போதைய நிலையில் கள நிலவரப்படி எனக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றார் கேஷ்கரி. 

பல்வேறு இனம், பிரிவினரைக் கொண்ட கலிபோர்னியாவில் உயரிய அரசியல் பதவிக்கு போட்டியிடும் எனக்கு அமெரிக்க இந்தியர் என்கிற பாரம்பரியம் துணை கொடுக்கும். 

கலிபோர்னியா மாகாணத்தில் பல்வேறு நாடுகளிலிருந்தும் குடியேறியவர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். எனவே குடியரசுக் கட்சியில் பல்வேறு இனப் பிரிவி னரை சேர்க்கவேண்டும் என்பதே இலக்கு. 

இந்தியர்களை மட்டுமே அணுகாமல் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்க ஆப்பி ரிக்கர்கள், லத்தீனியர்கள் என பல் வேறு தரப்பினரையும் அணுகி ஆதரவு கோருகிறேன் என்றார் கேஷ்கரி. 

கேஷ்கரி கலிபோர்னியா ஆளு நராக தேர்வானால் லூசியானா ஆளுநர் பாபி ஜின்டால், சவுத் கரோலினா ஆளுநர் நிக்கி ஹாலி வரிசையில் 3 வது அமெரிக்க இந்தியராக இடம்பெறுவார். 

வளர்ச்சி வேகம்மிக்க இயந்திரமாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் பொருளாதார ஆளுமைத்திறன் உலகத் தரம்மிக்கது. இந்திய தொழில் முனைவோர் முன்னேற தீவிரமாக பொருளாதார சீர்திருத்தம் தேவை என உணர்ந்துள்ளது இந்தியா. 

இந்தியா அமெரிக்கா இரண்டுமே பொருளாதார சீர்திருத் தங்களை கடைப்பிடிக்கவேண்டும். தாராள வர்த்தகத்தையும் கடைப் பிடிக்கவேண்டும். 

சந்தைகளை திறந்துவிட்டால் இரு நாடுகளுமே பரஸ்பரம் ஏற்று மதி இறக்குமதி செய்ய முடியும் என்றார் கேஷ்கரி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ