முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முரளிதரன் புகாருக்கு பதிலளிக்க முதல்வர் உம்மன்சாண்டி மறுப்பு

வியாழக்கிழமை, 26 மே 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,மே.- 26 - கேரள அமைச்சரவையில் கருணாகரன் எதிர்ப்பாளர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று முரளிதரன் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி மறுத்துவிட்டார். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் கிங் மேக்கராக இருந்தவர் கருணாகரன். அவர் உயிருடன் இருந்தபோது அவரை இழிவுபடுத்தியவர்களுக்கு தற்போது அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று கருணாகரன் மகனும் கேரள மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவருமான முரளிதரன் கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தநிலையில் மாநில காங்கிரஸ் முதல்வர் உம்மன்சாண்டி திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முரளிதரன் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளிக்க உம்மன்சாண்டி மறுத்துவிட்டார். முரளிதரன் குற்றச்சாட்டு குறித்து நான் எதுவும் சொல்வதிற்கில்லை. அமைச்சரவையில் எல்லோருக்கும் இடம் கொடுக்க முடியாது. அதற்காக யாரும் வேண்டுமென்றே ஒதுக்கப்படவில்லை என்று உம்மன்சாண்டி கூறினார். கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் வாட்டியூர்காவு சட்டமன்ற தொகுதியில் முரளிதரன் போட்டியிட்டு சுமார் 16 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. அதனால் பதவி ஏற்புவிழாவில் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து முரளிதரனிடம் கேட்டதற்கு பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள எனக்கு முறையான அனுமதி சீட்டு கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்