பாக்.,கில் தீவிரவாதிகள் தாக்குதலில் 8 பேர் சுட்டுக் கொலை

Image Unavailable

 

பெஷாவர், பிப்.12 - பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில்  தீவிரவாதிகள் தாக்கியதில் அமெரிக்க தூதரக உழியர், 3 ஆசிரியர்கள் உள்பட 8பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஊழியராகப் பணி புரிந்தவர் பைசல் சயீத்.  இவரது வீடு பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பெஷாவர் நகரில் உள்ளது. இவர் வீட்டின் அருகே நடந்து சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது உடலில் தோட்டாக்கள் பாய்ந்து பைசல் சயீத் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பைசல் சுட்டுக் கொல்லப்பட்டது கடும் கண்டனத் துக் குரியது என்று தெரிவி்த்துள்ளது. இதுபோல் கைபர்-பக்துன் கவா மாநிலத் தில் உள்ள ஹங்கு என்ற இடத்தில் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அப்போது பள்ளியில் இருந்த 3  ஆசிரியர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலர் காயமடைந்தனர். அதே மாகாணத்தில் மற்றொரு பகுதியில் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வீட்டுக்கள் புகுந்த மர்ம மனிதன் தனது உடலில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் 4 பெண்கள் உடல் சிதறி இறந்தனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரபல சூபி கவிஞரான மஸ்ட் துவகலி என்பவரது நினைவிடம் உள்ளது.  இவர் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் இந்த நினைவிடத்தை சிலர் தீயிட்டு கொளுத்திவி்ட்டு தப்பிச்  சென்றனர். தெஹ்ரித்- இ-தலிபான் அமைபினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

                                        

 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ