முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7-வது ஐ.பி.எல். ஏலம்: யுவராஜ் விலை ரூ.14 கோடி

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், பிப். 13  - பெங்களூரில் நடைபெற்ற 7 _ வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் அதிரடி வீரர் யுவராஜ் சிங் அதிகபட்சமாக ரூ. 14 கோடிக்கு ஏலம் போனார். 

தவிர, திணேஷ் கார்த்திக் ரூ. 12 . 5 கோடிக்கும், முரளி விஜய் ரூ. 5 கோடிக்கும் விலைக்கு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

7 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 

ஐ.பி.எல். ஏலப் பட்டியலில் 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் இடம் பெற்று இருந்தனர். இந்தியர்களில் 169 சர்வதேச வீரர்களும், முதல் தர போட்டியில் விளையாடிய 255 பேரும் அடங்குவார்கள். மீ தியுள்ளவர்கள் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். 

முதல் முறையாக இந்திய ரூபாய் மதிப்பில் ஏலம் நடத்தப்பட்டது. ரிச்சர்டு மேட்லி இதை நடத்தினார். 

முதலில் தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் ஏலம் விடப்பட்டார். அவருக்கான அடிப்படை விலை ரூ. 2 கோடியாகும். 

டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் அவரை எடுக்க போட்டியிட்டன. இறுதியில் டெல்லி அணி ரூ. 5 கோடிக்கு எடுத்தது. 

கடந்த 6 ஐ.பி.எல். போடட்டியிலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். அந்த அணி நிர்வாகம் அவரை தக்க வைத்துக் கொள்ள மேட்ச் கார்டை பயன்படுத்தவில்லை. 

அடுத்து இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே இடம் பெற்று இருந்தார். அவரை எந்த அணியும் வாங்கவில்லை. 

3_வது இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் பீட்டர்சன் ஏலத்துக்கு விடப்பட்டார். அவரை எடுக்க கடும் போட்டி இருந்தது. டெல்லி அணி மேட்ச் கார்டை பயன்படுத்தி அவரை ரூ. 9 கோடிக்கு எடுத்தது. 

20 ஓவர் போட்டி நாயகனான யுவராஜ் சிங் அதிக தொகையான ரூ. 14 கோடிக்கு ஏலம் போனார். அவரை ராயல் சேலஞ்சர் ஸ் பெங்களுர் அணி எடுத்தது. நிர்ணயிக்கப்பட்டதை விட (ரூ.2 கோடி) அவர் 7 மடங்கு விலைக்கு போனார். 

கொல்கத்தா அணிக்கும், பெங்களூர் அணிக்கும் யுவராஜ்சிங்கை எடுக்க கடும் போட்டி இருந்தது. இதனால் தான் அவரது விலையும் உயர்ந்தது. இறுதியில் பெங்களூர் அணி எடுத்தது. 

தென் ஆப்பிரிக்க வீரர் காலிசை ரூ. 5.5 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் எடுத்தது. சென்னை அணியிடம் இருந்து மேட்ச் கார்டை பயன்படுத்தி கொல்கத்தா அணி அவரை வாங்கியது. 

அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த சேவாக் ரூ. 3.2 கோடிக்குத் தான் விலை போனார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை எடுத்தது. 

டெல்லி அணி அவரை ஏலத்தில் எடுத்து தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அடுத்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னரை ஐதராபாத் அணி ரூ. 5.5 கோடிக்கு எடுத்தது. 

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் மிட்செல் ஜான்சனை பஞ்சாப் அணி ரூ. 6.5 கோடிக்கு எடுத்தது. தமிழக வீரர் திணேஷ் கார்த்திக்கு அதிக மவுசு இருந்தது. 

அவரை 12.5 கோடிக்கு டெல்லி அணி எடுத்தது. அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 6 மடங்குக்கு அதிகமாக விலை போனார். 

டூபெலிசிசை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 4.75 கோடிக்கு தக்க வைத்தது. மேட்ச் கார்டை பயன்படுத்தி சென்னை அணி அவரை எடுத்தது. 

அடுத்து நியூசிலாந்து கேப்டன் மெக்குல்லமை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 3.25 கோடிக்கு எடுத்தது. மைக் ஹஸ்சியை சென்னை அணியிடமிருந்து மும்பை தட்டி பறித்தது. 

அவருக்கான ஏலம் ரூ. 5 கோடியாகும். அமித் மிஸ்ராவை ஐதராபாத் அணி மேட்ச் கார்டை பயன்படுத்தி தக்க வைத்துக் கொண்டது. 

ராபின் உத்தப்பாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது. அவருக்கான விலை ரூ. 5 கோடியாகும். அவ ர் பெங்களூர், புனே, அணியில் இதற்கு முன்பு விளையாடி இருக்கிறார். 

மேற்கு இந்தியத் தீவு அதிரடி வீரர் சுமித்தை சென்னை அணியும் (ரூ. 4.5 கோடி), தென் ஆப்பிரிக்கா அதிரடி பேட்ஸ்மேன் குயின்டன் காக்கை டெல்லி அணியும் (ரூ.3.5 கோடி ) எடுத்தது. 

யூசுப் பதானை ரூ. 3.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்க வைத்துக் கொண்டது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை ரூ. 4 கோடிக்கு ராஜஸ்தான் அணி எடுத்தது. 

ஏலம் போன வீரர்கள் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் ஆனவர்கள். அடுத்த 2 ஆண்டுகளில் ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒவ்வொரு ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகமாக வழங்க வேண்டும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago