முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: நெருக்கடியில் இந்திய அணி

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

வெலிங்டன், பிப். 14  - இந்தியா மற்றும் நியூசிலாந்திற்கு இடையேயான 2_வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் இன்று துவங்க இருக்கிறது. 

முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இன்று துவங்கும் 2_வது டெஸ்டில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது. 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து கேப்டன் மெக்குல்லம் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடிவருகிறது. 

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே முதலில் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் நியூசி. 4_0 என்ற கணக்கில் வென்றது. 

இதனைத் தொடர்ந்து2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. ஆக்லாந்தில் நடந்த முதல் டெஸ்டில் நியூசி. 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2_வது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு துவங்குகிறது. 

நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய  அணி ஒரு வெற்றி கூட பெறவில்லை. எனவே கேப்டன் தோனிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

முதல் டெஸ்டில் தோல்வி அடைந்ததால் இந்திய அணி மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. எனவே இந்த 2 _வது டெஸ்டில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலை உள்ளது. 

வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்று இரண்டரைஆண்டுகள் ஆகிறது. 10 தோல்வியை சந்தித்த இந்தியா வெலிங்டன் டெஸ்டிலாவது வெற்றி பெற்று இழந்த பெருமையை மீட்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் டெஸ்ட் தொடரை சமன் செய்யா விட்டால் தரவரிசையிலும் பின்னடைவு ஏற்படும். இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர். 

நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சவாலானதே. வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடுவது அவசியமானதாகும். 

நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரோஸ் டெய்லர் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அவருக்குப் பதிலாக டாம் லதம் இடம் பெறுவார் என்று தெரிகிறது. 

பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் நியூசிலாந்து இந்த டெஸ்டிலும் வென்று இந்தியாவை ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் இருக்கிறது. 

இரு அணிகளும் இதுவரை 53 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 18 டெஸ்டிலும் நியூசிலாந்து 10 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 25 டெஸ்ட் டிரா ஆனது. 

இன்றைய டெஸ்ட் இந்திய நேரப்படி வெலிங்டன் நகரில் அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

இந்திய அணி விபரம் : _  தோனி (கேப்டன்),  முரளிவிஜய், ஷிகார் தவான், புஜாரா, விராட் கோக்லி, ரோகித் சர்மா, ரகானே, ரவீந்திர ஜடேஜா, ஜாஹிர்கான், மொகமது சமி, இஷாந்த் சர்மா ஆகியோர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்