ரஜினி சிகிச்சைக்காக லண்டன் பயணமாகிறார்

rajini

சென்னை, மே.- 26 - சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜிகாந்த் மேல் சிகிச்சைக்காக லண்டன் பயணமாகிறார். இது குறித்த விபரம் வருமாறு:-​
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29​ந்தேதி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்த ராணா படப்பிடிப்பில் பங்கேற்றபோது திடீர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். காய்ச்சல், சளித்தொல்லை, வாந்தி போன்றவை இருந்தன. உடனடியாக மயிலாப்nullரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
25 நாட்களாக அவர் உடல் நலக்குறைவாக உள்ளார்.   ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கான அடிப்படை காரணங்கள் தெரிய வந்துள்ளன. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவருக்கு உயர் ரத்த அழுத்தம், ஆரம்ப நிலையில் சர்க்கரை வியாதி போன்றவை இருந்துள்ளன.
ரத்த அழுத்தத்துக்கு உரிய சிகிச்சை பெறாததால் சிறுnullரக செயல்பாட்டில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாப்nullரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதே இந்த விஷயங்கள் பரிசோதனையில் தெரிய வந்தன.  சிறுnullநீரகத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருந்தால் ரத்தத்தில் அதிகமாய் சேரும் உப்பு, பொட்டாசிய சத்துக்கள் சிரியாட்டினின் பாஸ்பேட்டில் இருந்து பிரியும் கிரியாட்டினின் எனும் வேதிப்பொருள் ஆகியவற்றை சிறுnullரகங்கள் வடிகட்டி சிறுnullர் மூலம் வெளியேற்றிவிடும். ரத்தத்தில் யூரியா எனப்படும் உப்பு சத்து அளவு 40 மில்லி கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும். பொட்டாசிய சத்து 4.5 மில்லி கிராமுக்கு குறைவாகவும் கிரியாட்டினின் அளவு 1 மில்லி கிராமுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
ரஜினிகாந்துக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளில் உப்பு சத்து, பொட்டாசிய சத்து, கிரியேட்டின் அளவுகள் அதிகமாக இருந்தன. இதனால்தான் சிறுnullநீரகம் பாதிக்கப்பட்டு இருந்தது. ரத்தத்தில் இயல்பாக 1.4 கிராம் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவும் ரஜினிக்கு குறைந்து இருந்தது.  ஆஸ்பத்திரியில் சிறுnullநீரக செயல்பாடு பாதிப்பு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை 5 முறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. சிறுnullநீரக பாதிப்பு காரணமாக உப்பு, புரதசத்து குறைவான உணவுகளை சாப்பிடுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனியறைக்கு மாற்றப்பட்ட பின் ரஜினி உற்சாகமாக இருக்கிறார். குடும்பத்தினருடன் அமர்ந்து டி.வி. பார்க்கிறார். ஆனாலும் சிறுnullநீரக பாதிப்புக்கு தொடர் சிகிச்சை பெற இன்னும் 3 தினங்களில் ரஜினி லண்டன் செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்