முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட்: நியூசிலாந்து 192 ரன்னில் சுருண்டது

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

வெலிங்டன், பிப். 15 - இந்திய அணிக்கு எதிராக வெலிங்டன் நகரில் நேற்று துவங்கிய 2_வது டெஸ்டில் நியூசி. அணி முதல் இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. 

இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர்களான இஷாந்த் சர்மா மற்றும் மொகமது சமி இருவரும் அபாரமாக பந்து வீசினர். சர்மா 6 விக்கெட்டும், சமி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். 

நியூசிலாந்து அணி தரப்பில், வில்லியம்சன் ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடினார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். வில்லி அதிகபட்சடமாக 42 ரன்கள் எடுத்தார். 

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0_4 என்ற கணக்கில் இழந்தது. 

2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் முதல் டெஸ்டில் இந்தியா 40 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. 

இரு அணிகள் இடையேயான 2_வது டெஸ்ட் போட்டிநேற்று வெலிங்டனில் தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் லதம், நீசம் ஆகியோர் அறிமுகமானார்கள். 

டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இஷாந்த் சர்மா பந்து வீச்சு அபாரமாக இருந்தது. 

அவரது பந்தில் தொடக்க வீரர்கள் புல்டான் (13 ரன்), ரூதர்போர்டு (12 ரன்) ஆட்டமிழந்தனர். அதன் பின் லதமை (0ரன்) இஷாந்த் சர்மா வெளியேற்றினார். 

முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து கேப்டன் மெக்குல்லம் 8 ரன்னில் மொகமது சமி பந்தில் அவுட் ஆனார். 

அப்போது ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 45 ரன் இருந்தது. அதன் பின் வில்லியம்சன் _ ஆண்டர்சன் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்தது. 

ஆண்டர்சன் (24 ரன்) வாட்லிங்(0ரன்) ஆகியோர் இஷாந்த் சர்மா பந்தில் வீழ்ந்தனர். அப்போது நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 86 ரன் எடுத்து இருந்தது. 

அடுத்து வில்லியம்சன் _ நீசம் ஜோடி துரிதமாக ரன்களை சேர்த்தது. வில்லியம்சன் 47 ரன்னிலும், நீசம் 33 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இருவரது விக்கெட்டையும் மொகமது சமி கைப்பற்றினார். 

அதன் பின் இஷாந்த் சர்மா பந்தில் டிம் சௌதி (32ரன்) வெளியேறினார். கடைசி விக்கெட்டாக போல்ட் விக்கெட்டை சமி வீழ்த்தினார். 

நியூசிலாந்து அணி 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இஷாந்த் சர்மா 6 விக்கெட்டும், மொகமது சமி 4 விக்கெட்டும் எடுத்தனர்.  

பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர்கள் முரளி விஜய், ஷிகார் தவான் களம் இறங்கினர். தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. 

முரளி விஜய் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். டிம் சௌதி வீசிய பந்தை அடிக்காமல் விக்கெட் கீப்பரிடம் விட முயற்சித்த போது பந்து கையுறையில் உரசியபடி சென்று கேட்ச் ஆனது. 

அடுத்து ஷிகார்தவானுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுமையாக விளையாடியது. அவ்வப்போது பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பியது. 

தவான் துரிதமாக ரன்களை சேர்த்தார். அவர் வாக்னர் ஓவரில் 2 பவுண்டரி , 1 சிக்சர், அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 

இந்திய அணி 89 ரன் எடுத்து இருந்த போது, புஜாரா அவுட் ஆனார். போல்ட் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அவர் 19 ரன் எடுத்தார். 

ஆட்டம் முடிய சில ஓவர்கள் எஞ்சி இருந்ததால் நைட் வாட்ச்மேனாக வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இறக்கப்பட்டார். 

நேற்றைய ஆட்ட நேர முடிவில்  இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 100 ரன் எடுத்துள்ளது. தவான் 71 ரன்னுடனும், இஷாந்த் சர்மா 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago