முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் மகன் நிரபராதி: தவறு செய்திருந்தால் நானே போலீசில் பிடித்து கொடுப்பேன்- தீவிரவாதியின் தாயார் பேட்டி

வியாழக்கிழமை, 26 மே 2011      தமிழகம்
Image Unavailable

மேலூர், மே.- 26 - என் மகன் நிரபராதி. அவன் தவறு செய்திருந்தால் நானே போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன் என்று தீவிரவாதி  முகம்மது நியாசின் தாயார் தெரிவித்துள்ளார்.     பிரான்சில் கைது செய்யப்பட்ட இந்திய தீவிரவாதி குறித்து மதுரை மேலூரில் டெல்லி உளவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை  நடத்தி வருகிறார்கள். அவரது வீட்டை கண்டுபிடித்து விட்ட அவரது தாயார் பாத்திமாவிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
   கடந்த 10 ம் தேதி அல்ஜீரியாவிலிருந்து பாரீஸ் சென்ற விமானத்தில் பயணித்த முகம்மதுநியாஸ் ரஷீத்(33) உள்ளிட்ட 6 பேரை தீவிரவாத தொடர்பு கண்காணிப்பில் அந்த நாட்டு போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் தீவிரவாத பயிற்சிகள் வழங்கியதாக இவர்களில் முகம்மது நியாஸ் ரஷீத், தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினீயர் எனக்கூறப்பட்டது. அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய முகம்மது நியாஸ்ரஷீத் சிமி என்ற இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் இருந்துள்ள தகவலும் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து உளவுப்பிரிவினர் திருச்சியில் நடத்திய விசாரணையில் முகம்மது நியாஸ் ரஷீத் மதுரை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதன் பேரில் மதுரை மாவட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி இசக்கி ஆனந்தன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முகம்மது நியாஸ் ரஷீத்தின் தாயார் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் என்ற தகவலின் பேரில் மேலூரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மத்திய உளவுதுறை (ஐபி) அதிகாரிகள் டெல்லியில் இருந்து விரைந்து வந்து மதுரையில் முகாமிட்டு மேலூரில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
   மதுரை நகரில் முகம்மது நியாஸ் பெயரில் ஒருவரும், மேலூரில் இதே பெயரில் 6 பேரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில்  அவர்கள் குடும்பத்திற்கும், பிரான்சில் சிக்கிய முகம்மது நியாஸ் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.  மேலூரில் முகம்மது நியாசின் வீட்டை  கண்டுபிடித்த டெல்லி உளவு பிரிவு போலீசார் அவரின் தாயார் பாத்திமாவிடம் பல மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை குறித்து முகம்மது நியாசின் தாயார் தாயார் பாத்திமா நிருபர்களிடம் கூறியதாவது, எனது மகன் முகம்மது நியாஸ் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் எல்கேஜி முதல் 10 ம் வகுப்பு வரை படித்தான். பிளஸ்1, பிளஸ் 2 ரயில்வே பள்ளியில் படித்தான். இதற்கு பின்பு ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் இரண்டு ஆண்டு பயின்றான். இதன் பிறகு திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்தான். அவன் படிக்கும் போது எந்த புகாரும் வந்ததில்லை. இணையத்தளம் மூலம் நிஷா என்பெண்ணை காதலித்து வந்தான். இவர்களது திருமணத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் அவனாகவே அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். பின்னர் அந்த பெண்ணுடன் பிரான்ஸ் சென்று விட்டான்.
    எனது கணவர்ஸ  சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை என்னை வந்து பார்த்து செல்வார். கடந்த ஜனவரி மாதம் 15 ம் தேதி முகம்மது நியாஸ் தனது மனைவியுன் இங்கு வந்தான். இதன் பிறகு மீண்டும் அவன் பிரான்சுக்கு சென்றுவிட்டான். ஆனால் இந்தியாவில் தங்கியிருந்த 15 நாளும் அவனை போலீசார் கண்காணித்துள்ளனர். அவன் மீது எந்த தவறும் இல்லாததாலும், நல்லவர் என்பதாலும் தான் போலீசார் அவனை மீண்டும் பிரான்சுக்கு செல்ல அனுமதித்தனர். அவன் தீவிரவாதி என்றால் அவனை இந்தியாவிலேயே கைது செய்திருக்க வேண்டியதுதானே. அவன் தவறு செய்திருந்தால் பிரான்சில் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே நடவடிக்கை எடுத்திருப்பார்கள். என் மகன் முகம்மது நியாஸ் எந்த தவறும் செய்திருக்க மாட்டான். அவன் தவறு செய்திருந்தால் நானே அவனை போலீசில் பிடித்து கொடுத்திருப்பேன். எந்த தவறும் செய்யாத முகம்மது நியாசை இந்தியா என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்