சீனாவில் கட்டடம் இடிந்து 10 பேர் சாவு

Image Unavailable

 

பெய்ஜிங், பிப். 16 - சீனாவின் கிழக்கு மாகாணத்தில் திருமணத்தின் போது மகால் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 91 பேர் காயமடைந்தனர். 

சீனாவின் ஜிஜியாங் மாகாணம் யாலுவாங் கிராமத்தில் உள்ள மகாலில் விழாயாழக் கிழமை மாலை திருமணம் நடந்து கொண்டிருந்த போது திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. 

கூட்டம் அதிகமாக இருந்ததால் பலராலும் வெளியேற முடியவில்லை. இதில் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 91 பேரில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

கட்டட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அது, பழைய கட்டடம் என்பதாலும், கட்டட மேற்கூரை பனிக்கட்டியால் சூழப்பட்டிருந்ததும் விபத்துக்கு காரணமாக இருக்காலாம் என்று கூறப்படுகிறது. 

உயிரிழந்தவர்களின் சடலங்களையும், காயமடைந்தவர்களையும் 100 _க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் மீட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ