முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெஷாவரில் தற்கொலைப் படை தாக்குதலில் 9 பேர் பலி

வியாழக்கிழமை, 26 மே 2011      உலகம்
Image Unavailable

பெஷாவர், மே - 26 - பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் போலீஸ் கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பெஷாவர் நகரில் 250 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளுடன் லாரி ஒன்றை ஓட்டிவந்த தற்கொலைப்படை தீவிரவாதி, போலீஸ் கட்டிடம் ஒன்றின் மீது அந்த லாரியை மோதி வெடிக்கச் செய்தான். பயங்கர சப்தத்துடன் குண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 9 போலீஸ்காரர்கள் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார்கள். தற்கொலைப் படை தீவிரவாதியும் பலியானான். மேலும் 15 பேர் இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்த போலீஸ் கட்டிடம் குண்டுவெடிப்பில் தரைமட்டமானது. பல்கலைக்கழக சாலையில்தான் இந்த போலீஸ் கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தில்தான் குற்ற புலனாய்வுதுறை அலுவலகம் இயங்கிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்துவந்து உயிர் இழந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தாக்குதல் ஒரு தற்கொலைப்படை தீவிரவாதியினால்தான் நடத்தப்பட்டுள்ளது என்று கைபர் பக்துன்க்வா மாகாண அமைச்சர் பஷீர் பிலூர் உறுதிப்படுத்தினார்.
இந்த தற்கொலைப் படை தீவிரவாதி வந்த வாகனம் 350 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. தீவிரவாதியின் உடல் துண்டு துண்டாக சிதறிக்கிடந்தது. தீவிரவாதியின் ஒரே ஒரு விரல் மட்டும் கிடைத்துள்ளது என்றும் அந்த மந்திரி தெரிவித்தார். பலியான 9 பேரும் போலீஸ்காரர்கள் என்றும், இந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு சம்பவம் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. தற்கொலைப் படை தாக்குதலை அடுத்து பெஷாவர் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெஷாவர் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago