முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானுக்கு 3 ஹெலிகாப்டர்களை வழங்கியது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014      இந்தியா
Image Unavailable

வழங்குகிறதுகாபூல், பிப்.17 - ஆப்கானிஸ்தானுக்கு 3 ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்குகிறது. ஆப்கானிஸ்தாமில் உள்ள கந்தகாரில் இந்தியா உதவியுடன் தேசிய வேளாண் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பு விழா நேற்று முன் தினம் நடந்தது. அதில் இந்திய வெளியுரவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் கலந்து கொண்டார். பல்கலைக்கழகத்தை ஆப்கானிஸ்தான அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் ஆகியோர்கூட்டாக திறந்து வைத்தனர். அதன் பின்னர் அதிபர் ஹமீத் கர்சாவை மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் தனியாக சந்தித்து பேசினார். அப்போது ஆப்கானிஸ்தானின் பதுகாப்பு குறித்தும், அமெரிக்க படைகள் தொடர்ந்து தங்கியிருப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட கர்சாய் மறுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது மிக குறைந்த அளவில் நேட்டோ படைகள் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அது ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கருதுதிறேன். ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை அமெரிக்கா, பாகில்தான் ஆகிய 2 நாடுகளின் ஆதரவும் தேவை என்றார். 

இந்தியா வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் கூறும் போது, ஆப்கானிஸ்தானின் நேட்டோ படை தொடர்ந்து இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.ஆப்கானிஸ்தானில் ஜனநாயக பயிரை சர்சாய் மிகவும் சிறப்பாக துணிச்சலாக தலைமையின் கீழ் வளர்த்துள்ளார். ஆயுதங்களை கைவிடும் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத குழுக்களுக்கு மன்னிப்பு வழங்க முன் வந்துள்ளதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இந்தியா ஆயுதங்களுடன் ரானுவ உதவி வழங்க வேண்டும் என கர்சாய் விரும்புகிறார். ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 3 ரானுவ ஹெலிகாப்டர்களை வழங்கு கிறது என்றார். 

கடந்த 1999-ம் ஆண்டு பயணிகள் விமானத்தை தலிபான் தீவிரவாதிகள் கந்தகாருக்கு கடத்தி சென்றனர். இந்திய தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன்படி, அப்போது 3 தீவிரவாதிகளை ஒப்படைக்க மத்திய வெளியுறவு துறை மந்திரி ஆப்கானிஸ்தான் சென்றார். அதன் பின்னர் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இந்திய வெளியுரவு மந்திரி மீண்டும் ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்