முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருமளவில் ஊழல் செய்தது காங்., கட்சி தான்: அத்வானி

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.18 - இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மன்மோகன்சிங்கின் 10 ஆண்டு  கால  அரசு  பெருமளவில் ஊழல் புரிந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி குற்றம்சாட்டினார். இதுபற்றி தனது வலைப்பூவில் அத்வானி கூறியள் ள தாவது:

மிகவும் நேர்மையானவர் என்ற பெயருடன் ஆட்சியைத் தொடங்கியவர் பிரகதம ர் மன்மோகன்சிங். ஆனால்   இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான    அரசுதான்  பெருமளவில் ஊழல் புரிந்து ள்ளது என்ற அவப் பெயரை கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அவர் பெற்று ள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  ஆட்சியில் தான் காமன்வெல்த் விளை யாட்டு, 2 ஜி அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு  ஊழல்களை சி.ஏ.ஜி. கொண்டு வந்தது.

நாடாளுமன்றத்தின் மதிப்பை  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  அரசு சீர்குலைத்துள்ளது.  பிரதமர் மற்றும் சோனியா காந்தியின் முன்னிலையில் பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மிளகு பொடியை உறுப்பினர்கள் மீது தூவி மிகவும் ஒழுங்ககீனமற்ற முறையில் நடந்து கொண்டார். 

இதனால் சுஷ்மா ஸ்வராஜ் உள்பட பல உறுப்பினர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இது 2-வது முறையாக  ஆட்சி அமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிக மோசமான சாதனையாகும். அதே சமயம் முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  ஆட்சியில் வாக்குக்கு பணம் அளித்த விவகாரத்தை வெளிப்படுத்தியதற்கு பாஜக எம்.பி.க் களுக்கு பரிசு அளிப்பதற்குப் பதிலாக அவர்களை சிறையில்  தள்ளிய பெருமை அரசுக்கு ஏற்பட்டது. தற்போதைய அரசின்  ஒவ்வொரு நாடா ளுமன்ற கூட்டத் தொடரிலும், தெலுங்கானா விவகாரத்தால் தொடர் அமளி, சபை ஒத்தி வைப்பு நடந்தது. ஆனால் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது நாசடாளு மன்றத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார். 

             

        

    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்