முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 6-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு

வியாழக்கிழமை, 26 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.27 - ஜூன் 6-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, தமிழக வேளாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு செயலாளர்கள், மாவட்ட அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை சென்னை கோட்டையில் நேற்று நடத்தி, ஆலோசனை வழங்கினார். இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 6ல் தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக முதல்வரால் ஆணை வழங்கியதின் தொடர்ச்சியாக  வேளாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேளாண்மைத்துறை மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தை 25.05.2011ல் சென்னையில் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அனைத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு கூட்டத்திற்கு வேளாண்துறை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் டாக்டர் க.அருள்மொழி  வேளாண்துறை ஆணையர்  அதுல் ஆனந்த், தோட்டக்கலைத்துறை ஆணையர் டாக்டர். சந்திரமோகன், வேளாண் பொறியியல்துறை தலைமைப் பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் விதைச்சான்று இயக்குநர் (பொறுப்பு) த.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பொன்ராஜ்  கலந்து கொண்டார். ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய  வேளாண்துறை அமைச்சர்  அனைத்து அலுவலர்களும் துடிப்போடும், முனைப்போடும் செயல்பட்டு வேளாண்மையை இந்தியாவிலேயே உற்பத்தியில் முதன்மை மாநிலமாக ஆக்குவதற்கான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள். இந்த குறுவை நெல் சாகுபடி பட்டத்திற்கு நடப்பு வருடம் முன் கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து (06.06.2011ல்) தண்ணீர் திறந்துவிடப்படுவதால் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களான சான்று விதைகள், உரங்கள், nullச்சி மருந்துகள் மற்றும் வேளாண் கருவிகள் போதுமான அளவில் அந்தந்த பகுதிகளில் இருப்பு வைத்து தங்குதடையின்றி விவசாயிகளுக்கு கிடைத்திட அதிகாரிகள் அனைவரும் எல்லா நடவடிக்கைகளும் எடுத்திடும்படி அமைச்சர் அறிவுரைகள் வழங்கினார். மேலும், இடுபொருட்கள் அனைத்தும் தரமானவையாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேண்டும் என அமைச்சர் உத்திரவிட்டார்.

மேட்டூர், அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு உயர் தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து அதிக உற்பத்தி எடுத்திட அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தார். உரங்களை பதுக்கல் செய்து வியாபாரம் நடை பெறுவதை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கையும் எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் டாக்டர். க. அருள்மொழி பேசுகையில் அண்டைய மாநிலங்களான ஆந்திரா, மகாராஸ்ட்ரா மற்றும் குஜராத்திற்கு அலுவலர் குழுக்கள் சென்று ஆய்வு மேற்கொண்டு பயிர்காப்பீட்டுத் திட்டம் மற்றும்  இதர முக்கிய சிறு நீnullர் பாசனத்திட்டங்கள் செயல்படும் முறைகள் குறித்து நேரில் அறிந்து அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்பிக்கும்படி ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட  பொன்ராஜ்  இரண்டாவது பசுமை புரட்சி எடுத்திட வேண்டிய முக்கிய காலக்கட்டம் இதுவாகும். இதற்கான வயல் வெளிப்பணிகளை கண்டறிந்து வேளாண்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும்.  உற்பத்தியை இரட்டிப்பாக்கி பெருக்கிடும் வழிகள், திருந்திய நெல் சாகுபடிமுறை, துல்லிய பண்ணையம் அமைத்தல் மற்றும் கிருஷியாத்ராக்கள் (விவசாயிகள் மேளா) போன்ற சிறப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள். இறுதியில்  வேளாண்மைத்துறை அமைச்சர்  திட்டப் பணிகள் அனைத்தையும் தொய்வின்றி சிறப்புடன் செயல்பட்டு பணியாற்றி வேளாண்மை உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கிட அனைத்து அலுவலர்களும் ஊக்கத்துடன் செயலாற்றிட வேண்டுமென மீண்டும் வலியுறுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago