இலங்கை போர் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை அவசியம்

Image Unavailable

 

கொழும்பு, பிப்.18 - இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள்ஆணையர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தி உள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை, 74 பக்கங்கள் கொண்ட அரிக்கையை ஐ.நா. தலைமையகத்துத்து அனுப்பியுள்ளார். அதில், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது நிகழ்ந்த சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐ.நா. சர்வதேச அளவிலான விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக இலஙஅகை அரசு நடத்தி வரும் உள்நாட்டு விசாரணையையும் கண்காணிக்க வேண்டும். இலங்கையில் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்ற பெயரில் அப்பாவி தமிழர்கள் துன்புறுத்தப் படுவதைத் தடுக்க அச்சட்டத்தை வாபஸ் ஸெறச் செய்ய வேண்டும்.காணாமல் போனவர்களைப் பற்றியும், தேடப்பட்டுவரும் குற்றவாலிகள் எனக்கூறப்படுபவர்கள் பற்றியும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று நவநீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இந்த அரிக்கையை அவர், இலங்கை அரசுக்கும் அண்மையில் அனுப்பினார். இதற்கு இலங்கைவெளியுறவுத் துறையிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை.

இலங்கையில் நடைபெற்ற இருதிக்கட்டப் போரின்போது, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அவர்களில் பலர் அரசுத் துருப்புகளால் துன்புருத்தப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. ஏற்கெனவே கூறியிருந்தது. இதை இலங்கை அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள், சர்வதேச மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா 3-வது தீர்மானத்தை கொணடு வரவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ