முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - நியூசி., 2-வது டெஸ்ட் டிரா: மெக்குல்லம் முச்சதம்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

வெலிங்டன், பிப். 19 - இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வெலிங்டனில் நடைபெற்ற 2_வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட்  போட்டி டிராவில் முடிவடைந்தது. 

இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்ததன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை நியூசிலாந்து அணி 1_ 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்குல்லம் முச்சதம் அடித்து புதிய சாதனை படைத்து இருக்கிறார். தவிர, வாட்லிங் மற்றும் நிஷாம் சதம் அடித்தனர். 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் கடந்த 13_ம் தேதி துவங்கி 18_ம் தேதியுடன் முடிந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூசி. அணி முதல் இன்னிங்சில் 192 ரன்னும், இந்தியா 438 ரன்னும் எடுத்தன. 

246 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2_வது இன்னிங்சைஆடிய நியூசிலாந்து அணி 94 ரன்களுக்கு 5 விக்கெட் டுகளை இழந்தது ஆனால் மெக்குல்லம் _ வாட்லிங் ஜோடி ஆட்டத்தி ன் போக்கை மாற்றியது. 

இந்த ஜோடி 6_வது விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. வாட்லிங் 124 ரன் சேர்த்து அவுட் ஆனார். 

4_வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூ சிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 571 ரன் குவித்தது. மெக்குல்லம் 281 ரன்னுடனும், நிஷாம் 67 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. நியூசி. அணி தொடர்ந்து ஆடியது. நிஷாம் 128 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். 

அறிமுக வீரரான இவருக்கு இது முதல் சதமாக அமைந்தது. மறுமுனையில் மெக்குல்லம் டிரிபிள் சதம் அடித்தார். அவர் 557 பந்துகளை எதிர்கொண்டு 32 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் முச்சதத்தை கடந்தார். 

இதன் மூலம் நியூசிலாந்து வீரர்களில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்து இருக்கிறார். பின்னர் மெக்குல்லம் 302 ரன்னில் ஜாஹீர் பந்தில் அவுட்டானார். 

அதன் பின்னர் வந்த சௌதி 11 ரன்னில் நடையை கட்டினார். ஸ்கோர் 210 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 680 ரன்கள் என்ற நிலையில் நியூசிலாந்து அணி ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. 

அப்போது நிஷாம் 137, வாக்னர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில், ஜாஹீர்கான் 5, ஷமி 2, ஜடேஜா1 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து இந்தியஅணிக்கு 435 ரன்கள் என்ற இலக்கை நியூசி. அணி நிர்ணயித்தது. 67 ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில் இநதிய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. 

ஷிகார் தவான் 2, முரளி விஜய் 7, புஜாரா 17 ரன்களில் பெவிலியன் திரும்பினர். கோக்லி 129 பந்துகளில் 1 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். 

இந்திய அணி 52 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்த போது, ஆட்டம் டிராவில் முடித்துக் கொ ள்ளப்பட்டது. கோக்லி 105, ரோகித்சர்மா 31 ரன்கள் எடுத்திருந்தனர். 

முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசி. அணி 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 1_ 0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது மெக்குல்லத்திற்கு அளிக்கப்பட்டது. 

ஒரு நாள் போட்டி தொடரிலும், ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாத இந்திய அணி டெஸ்ட் தொடரிலும் ஒரு வெற்றி கூட பெறாமல் வெறும் கையுடன் திரும்புகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்