அமெரிக்க இந்தியர்களே மாற்றத்துக்குக் காரணம்: ஜெய்சங்கர்

Image Unavailable

 

வாஷிங்டன், பிப்.19 - அமெரிக்காவில் வசிக்கும் மிகச் சிறிய இந்திய சமுதாயம்தான் இருநாட்டு உறவில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் எஸ். ஜெய்சங்கர் புகழாரம் சூட்டினார்.

கிரேட்டர் வாஷிங்டன் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 13 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர். இதில் ஜெய்சங்கர் பேசியதாவது:

 

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக் கும் இடையிலான உறவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உறவு வலுப்படுவது இயல்பான ஒன்றுதான் என்று நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை இருநாட்டு உறவு வலுவடைந்ததற்கு காரணம் அமெரிக்காவில் வசிக்கும் மிகச் சிறிய இந்திய சமுதாயம்தான்.

இங்கு வாழும் இந்தியர்களை மனதில் வைத்துதான் ஒட்டுமொத்த இந்தியாவையும் அமெரிக்கர்கள் கணக்கிடுகிறார்கள். இந்திய சமுதாயம் கல்வியறிவு பெற்ற மிகச் சிறந்த சமுதாயம், அதிக வருவாய் ஈட்டும் சமுதாயம், அதிக பொறுப்புள்ள சமுதாயம். அமெரிக்காவில் வசிக்கும் நம் நாட்டு மக்கள் நல்ல இந்தியராகவும் நல்ல அமெரிக்கராகவும் நல்ல அமெரிக்க-இந்தியராகவும் இருக்க வேண்டும்.

 

பாதுகாப்புத் துறை தவிர்த்து எரிசக்தி, கல்வித் துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி விநியோகஸ்தராக அமெரிக்கா உருவெடுக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ