தென் கொரியாவில் கட்டிடம் சரிந்து விழுந்து 4 மாணவர் பலி

Image Unavailable

 

சியோல், பிப்.19 - தென்கொரியாவில் உள்ள தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் ஜியோன்ஜு. தற்போது குளிர்காலம் என்பதால் சென்கொரியாவில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த நிலையில் திங்களக்கிழமை இரவு அந்நகரில் உள்ள அரங்கில் இசை கச்சேரி ஒன்று நடைபெற்றதுக் கொண்டிருந்தது. அதில் சுமார் 400 மேற்பட்ட கல்லுரி மாணவர்கள் கலநது கொண்டனர். அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் ஓட தொடங்கினர். எங்கும் துசி மண்டலம் சூழ்ந்து கொண்டது.இதில் கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழந்து இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். தகவல் அடைந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 73 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 4 கல்லுரி மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக மேற்கூரை சரிந்ததால் விபத்து ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ