முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்ஸாம் அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படுகிறது

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      இந்தியா
Image Unavailable

 

திஸ்பூர், மே,27 - சமீபத்தில் நடந்து முடிந்த அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. தருண் கோகோய் தொடர்ந்து 3 வது முறையாக கடந்த 18 ம் தேதி முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ஜே.பி. பட்நாயக் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பிறகு புதிய அமைச்சர்கள் குறித்த பட்டியலை பெற  தருண் கோகோய் டெல்லி சென்றார்.அங்கு மேலிட தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். புதிய அமைச்சர்கள் பட்டியலை பெற்றுக்கொண்ட அவர் நேற்று கவுகாத்தி திரும்பினார்.

இவர் தனது அமைச்சரவையில் 18 பேருக்கு அமைச்சர் பதவிகளை கொடுக்கிறார்.

இந்த 18 பேரும் இன்று பதவி ஏற்க இருக்கிறார்கள்.

தருண் கோகோய் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்ற போதிலும் அங்கு போதுமான இடவசதி இல்லாததால் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா  ஐ.டி.ஏ.கலாச்சார மையத்தில் நடைபெற உள்ளது.இந்த தகவல்களை கவர்னர் மாளிகை வட்டாரங்கள் கூறின.

அஸர்ஸாம் மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 126 இடங்களில் காங்கிரஸ் கட்சி 78 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்