முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 25 பேர் பலி

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

கீவ்,பிப்.21 - உக்ரைனில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 25 பேர் இறந்தனர். 241 பேர் காயமடைந்தனர்.

உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி அந்நாட்டில் அரசுக்கு எதிராக கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து 1991-ல் தனி நாடாக உருவெடுத்த உக்ரைன், தொடர்ந்து ரஷிய ஆதரவு நாடாக இருப்பதையே உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் விரும்புகிறார்.

பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியில் ரஷிய உறவே சிறந்தது என வாதிடுகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுத்து, அந்நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டத்தை ஊக்குவித்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு உக்ரை னில் இருந்து பஸ்கள், கார்கள் மூலம் தலைநகர் கீவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் செவ்வாய்க் கிழமை சுமார் 20 ஆயிரம் பேர் திரண் டனர். இங்குள்ள நாடாளுமன் றத்தை முற்றுகையிட்ட இவர்கள், அதிபர் யானுகோவிச் பதவி விலக வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற கட்டிடம் முன் டயர்கள் மற்றும் மரக் கட்டைகளைக் கொண்டு போலீ ஸார் அமைத்திருந்த பாதுகாப்பு அரணை சிலர் கொளுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் தீயை அணைக்க முற்பட்டபோது, அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பட்டாசுகளை கொளுத்தி வீசியதாகவும் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக வும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் கள் தெரிவிக்கின்றனர்.

இதை யடுத்து போலீஸாருக்கும் போராட் டக்காரர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதனால் அப்பகுதி போர்க்களம் போல் ஆனது. இது சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன் சுதந்தி ரம் அடைந்த பிறகு நடைபெற்ற மிகப்பெரிய வன்முறைப் போராட்ட மாக கூறப்படுகிறது. பல மணி நேரம் நீடித்த இந்த மோதலில் 25 பேர் இறந்தனர். 241 பேர் காயமுற்றனர்.

நாட்டு மக்களுக்கு அதிபர் விக்டர் யானுகோவிச்  ஆற் றிய உரையில் எதிர்க்கட்சிகளை கடுமையாகச் சாடினார். எதிர்க் கட்சித் தலைவர்கள் ஜனநாயக கோட்பாடுகளை புறக்கணித்து வருகின்றனர். தேர்தல் மூலமே நான் அதிகாரத்துக்கு வந்தேன். தெருக்க ளில் போராட்டங்கள் நடத்தி அல்ல. மக்களை ஆயுதம் ஏந்துமாறு செய்து எதிர்க்கட்சிகள் வரம்பு மீறிவிட்டன. இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டனையை அடைந்தே தீருவார்கள் என்றார் .

எரியும் சில கட்டிடங்கள் மற்றும் டயர்களின் புகைக்கு மத்தியில் கீவ் சுதந்திர சதுக்கத்தில் புதன்கிழமையும் சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டுள்ளனர். பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதால் இங்குள்ள பெண்களும் குழந்தைகளும் உடனே வெளியேற வேண்டும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago