முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். ஊழல்: குருநாத் மெய்யப்பனிடம் மீண்டும் விசாரணை

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப். 23 - ஐ.பி.எல். ஊழல் விவகாரம் தொடர்பாக குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோரை மீண்டும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாரிடம்சில விளக்கங்கள் கேட்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

கடந்த ஆண்டுஐ.பி.எல். போட்டிகள் நடந்த போது சூதாட்டம் நடந்ததாகபுகார்கள் எழுந்தன. இந்த சூதாட்டத்தில் சென்னை அணி உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சாட்டப்பட்டது. 

குற்றம் சாட்டப்பட்ட அவர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டார்கள். ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால், சூதாட்டத் தரகர் உத்தம் ஜெயின் உள்ளிட்டோரும் இதில் அடங்குவார்கள். 

இந்த ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த முத்கல் குழுவில் ரெயில்வே போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.சம்பத்குமார் சில தகவல்களை கூறியிருக்கின்றார். 

சமீபத்தில் முத்கல் குழுவில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஊழல் நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து குருநாத் மெய்யப்பன், உத்தம் ஜெயின், விக்ரம் அகர்வால் மற்றும் சிலரை மீண்டும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி முடிவு செய்துள்ளது. 

அதே நேரத்தில் ஐ.பி.எல். அதிகாரி சம்பத் குமாருக்கு சம்மன் அனுப்பிசில விளக்கங்களை கேட்கவும் தீர்மானிக்கப்பட்டது. 

இந்த ஊழல் வழக்கில் இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இன்னும் விசாரணை நிலையே உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்