முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய நிறுவனத்தின் பீடிக்கு மெரிக்காவில் தடை

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப்.24 - இந்திய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் பீடிக்கு உரிய தரம் இல்லை என்று கூறி அமெர்க்காவில் தடை விதிக்கப்பட்டுள்லது.

இது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தினர் வெநியிட்டுள்ல அறிக்கையில் கூறியிருப்படாவது. புணேயில் இயங்கி வரும் ஜாஷ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தினர் தயாரித்து பல்வேறு பெயர்களில் விற்வனை செய்து வரும் பீடிகள் தரமற்றவையாக இருப்பதால் அந்த பீடிகளை அெரிக்க சந்தையில் விற்பனை செய்யும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செரிவிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு கொணடுவரப்பட்ட புகை தடுப்பு மற்றும் புகையிலைக் கட்டுப்பட்டுச் சட்டத்தின்படி எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை என்று  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ரான்பாக்ஸி உள்ளிட்ட இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது அமெர்க்கா அண்மையில் நடவடிக்கை எடுத்தது. இதனால் இந்திய நிறுவனங்களைக் குறிவைதே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளன.

இதற்கு பகில் அளித்துள்ள அமெரிக்க உமவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாகத் தலைவர் மார்கரெட்ஹாம்பர்க், இந்திய நிறுவனங்களை குறிவைத்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவி்லை என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்