முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியாளர் பிளட்சருக்கு முன்னாள் வீரர்கள் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

  

மும்பை,பிப். 24  - இந்திய அணியின் பயிற்சியாளர் பிளட்சரால் எந்த பயனும் இல்லை என்று முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.  

வெளிநாட்டு மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி தொடர்வதால் கேப்டன் தோனி, பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் ஆகியோர் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். 

2011 _ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணிக்கு டங்கன் பிளட்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

ஜிம்பாப்வேயைச் சேர்ந்த இவர் பயிற்சியாளராக பொறுப்பை ஏற்ற பிறகு வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறவில்லை. 

தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. வெளிநாட்டில் 15 டெஸ்டில் ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே வெற்றி கிடைத்தது. 10 டெஸ்டில் தோற்றது. 4 டெஸ்ட் டிரா ஆனது. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, தற்போது நியூசிலாந்து பயணங்களில் தோல்வியை தழுவி இருந்தது. இதனால் பயிற்சியாளர் பதவியில் இருந்து பிளட்சரை நீக்க கோரிக்கை எழுந்துள்ளது. 

இந்த நிலையில் பயிற்சியாளர் பிளட்சரால் எந்த பலனும் இல்லை என்று முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான   அஜித் வடேகர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது _ பிளட்சருக்கு கொடுக்கப்பட்ட காலம் போதுமானதாகும். அவர் பயிற்சியாளர் பொறுப்பு மூலம் என்ன தந்திரத்தை கையாண்டார் என்று தெரியவில்லை. 

ஆனால் அவரால் எந்த பலனோ, உதவியோ அணிக்கு இருந்தது இல்லை என்று நான் கருதுகிறேன். 

தற்போதுள்ள கிரிக்கெட் உலகில் சாதிக்கும் ஆற்றல் வீரர்களுக்கு அதிகமாக இருக்கிறது. தோனியை பொறுத்தவரை ஒரு நாள் போட்டியில் யாருடைய ஆலோசனையும் அவருக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இந்திய அணியின் மற்றொரு முன்னாள் கேப்டன் திலீப் வெங்க்சர்க்கார் கூறியதாவது _ பயிற்சியாளர் தேர்வு முறையில் கிரிக்கெட் வாரியத்தின் கொள்கை முடிவு தவறானதாகும். 

கிரிக்கெட் வாரியம் தான் தேர்வு செய்கிறது. இதை மாற்ற வேண்டும். அணியில் உள்ள சீனியர் வீரர்களிடம் கலந்து ஆலோசனை செய்து பயிற்சியாளரை தேர்ந்து எடுக்க வேண்டும். 

இந்தியரா, வெளிநாட்டவரா என்பது பிரச்சினை இல்லை. சிறந்த வரை பயிற்சியாளராக தேர்வு செய்வது தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

பிளட்சரின் ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டு நீட்டித்தது. அடுத்த மாதத்துடன் அவரது ஒப்பந்தம் முடிகிறது. அவரது பயிற்சியின் கீழ் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது மட்டுமே முக்கியமானது. 

பிளட்சர் இந்திய அணியின் 4_வது வெளிநாட்டு பயிற்சியாளர் ஆவார். ஜான் ரைட் (நியூசிலாந்து), கிரேக் சேப்பல் (ஆஸ்திரேலியா), கேரி கிர்ஸ்டன் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் இதற்கு முன்பு பயிற்சியாளர்களாக இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்