முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் மாலில் விஷவாயு கசிந்து ஒருவர் பலி

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2014      வர்த்தகம்
Image Unavailable

 

நியூயார்க, பிப்.25 - அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் அருகே ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக ஒருவர் உயிரிழந்தார். 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அருகே லாங் என்ற தீவு உள்ளது. அங்கு ஹட்டிங்டன் என்ற இடத்தில் மிகப் பெரிய  ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை என்பதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது மாலின் ஒரு பகுதியில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தகவல் அறிந்த சப்லாப் கவுண்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட 28 பேரை மீட்டு ஹட்டிங்டன் மருத்துமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலன் இன்றி ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் கார்பன் மோனாக்சைடு என்ற வாயு கசிவு காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் 4 போலீஸாரும், 5 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் விஷ வாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். ஷாப்பிங் மாலின் அடித்தளத்தில் கடல் உணவு பதப்படுத்தும் நிலையம் உள்ளது. அங்கிருந்துதான் விஷவாயு கசிவு ஏற்பட்டதாக ஷாப்பிங் மால் ஊழியர்கள் விசாரணையின் போது தெரிவித்தனர். இந்த  சம்பவம்  நியூயார்க்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்