முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகத்சிங்கை தீவிரவாதி என்பதா? பிரிட்டனுக்கு கண்டனம்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

ஜக்ரான் (பஞ்சாப்), பிப். 25 - பிரிட்டனின் ஆராய்ச்சியாளர் ஒருவர் பகத் சிங்கை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்து உள்ளது. 

வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி  பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றால் பகத் சிங்கை சுதந்திரப் போராட்ட தியாகி என பிரிட்டனை குறிப்பிட வைப்போம் என்றும் அக்கட்சி தெரிவித்து உள்ளது. 

பஞ்சாப் மாநிலம் ஜக்ரானில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பா.ஜ.க. வின் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது _ 

பிரிட்டனில் பகத் சிங்கை பயங்கரவாதி என அழைப்பது நமக்கு மிக்க வேதனையையும், மன உளைச்சலையும் அளிக்கிறது. 

தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில்ஆட்சிக்கு வந்தால் பகத்சிங்கை பயங்கரவாதி என குறிப்பிட்டுள்ள மேற்கூறிய புத்தகத்தில் திருத்தம் செய்ய பிரிட்டனுக்கு நெருக்கடி கொடுப்போம். இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவோம். 

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரையில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முடியாது. வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரக் கோரி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நாடு தழுவிய ரத யாத்திரையை மேற்கொண்டார். 

ஊழலை ஒழிக்க கடுமையான நடைமுறை கள் வகுக்கப்பட வேண்டும் என்று கூறும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது ஆட்சிக் காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் ? என்றார் ராஜ்நாத் சிங். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்