முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்தில் குண்டு வீச்சு - துப்பாக்கிச்சூடு: 4 பேர் சாவு

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

பாங்காக், பிப்.26 - தாய்லாந்தில் அரசு எதிர்ப்பாளர்களின் பொதுக்கூட்டங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில்3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.

இதை தீவிரவாதச் செயல் என்று குறிப்பிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் யிங்லக் ஷினவத்ரா, இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் வணிக மாவட்டமான மத்திய பாங்காக்கில் அரசு எதிர்பாளர்களின் நடை பெற்றது. இதில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 6 வயது சிறுமி, 4 வயது சிறுவன் மற்றும் 40 வயது பெண் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர்.

இதேபோல டிராட் மாகாணத்தில் நடைபெற்ற அரசு எதிர்ப்பாளர்கள் பொதுக்கூட்டத்தில் மர்ம நபர்கள் வெடிகுண்டுகளை வீசியதோடு, கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா கூறுகையில் அரசியல் லாபத்துக்காக இதுப்போன்ற வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதில் எவ்விதக் காரணமுமின்றி அப்பாவி மக்களின்உயிர்கள் பறிக்கப்படுகின்றன.

இதுபோன்ற தீவிரவீதச் செயல்களை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்திக் குற்றவாளியைக் கண்டுபிடித்து சட்டத்திற்கு முன்பு நிறுத்தும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

அரசு மற்றும் போராட்டக்காரர்கள் இடையே நிகழ்ந்து வரும் மோதலில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். 700 பேர் காயமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்