முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தேர்தலில் 10 இந்திய வம்சாவளியினர் போட்டி

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப்.26 - அமெரிக்காவின் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்பளே இருக்கும் நிலையில் அந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய அமெரிக்கர்கள் 10 பேர் அறிவித்துள்ளனர்.

தற்போது எம்.பி.யாக இருக்கும் அமி பேரா, கலிஃபோர்னியா மாகாணத்தின் 7 ஆவது தொகுதியில் போட்டியிடுகிறார். அதே மாகாணத்தின் தலைமை வழக்குரைஞர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

கலிஃபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு குடியரசு கட்சியைச் சேர்ந்த நீல் கஷ்காரி போட்டியிடுகிறார். ஒபாமா அமைச்சரவையில் வர்த்தகத்துறையின் உதவி துறை அமைச்சராக பதவி வகித்த ரோ.கன்னா, கலிஃபோர்னியா மாகாணத்தின் 17 ஆவது தொகுதியில் தனது கட்சியின் மைக் ஹோண்டா என்ற வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுகிறார். 

ஸ்டான்ஃபோர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான வனிலா மாத்தூர் சிங், அதே தொகுதியின் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். தற்பேது, நியூஜெர்ஸி மாகாண சட்டப்பேரவையின் முதல் இந்திய அமெரிக்க அமைச்சராக இருக்கும் உபேந்திர சிவுகுலா, அந்த மாகாணத்தின் 12 ஆவது தொகுதியில் போட்டியிடுகிறார். பென்சில் வேனியா மாகாணத்தின் 6 ஆவதி தொகுதியில் மனன் திரிவேதி என்ற இந்திய அமெரிக்கர் போட்டியிடுகிறார்.

விஸ்கான்சின் மாகாணத்தின் 1 ஆவது தொகுதியில் அமர்தீப் கலேகா எஎனேற இந்திய அமெரிக்கர் போட்டியிடுகிறார். 2012 ஆம் ஆண்டு தேக்தலில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட குடியரசு கட்சியின் மூத்தத் தலைவர் பால்ரையான் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்