முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசா கட்டணம் உயர்த்த இங்கிலாந்து அரசு முடிவு

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், பிப்.26 - இங்கிலாந்து நாட்டின் பட்ஜெட்டில் ரூ.516 கோடி பற்றாகுறை ஏற்பட்டதையடுத்து விசா கட்டணத்தை 4 சதவிதம் வரை உயர்த்த திட்டம்ட்டுள்ளது.

இங்கிலாந்து பட்ஜெட்டில் ஏற்பட்டுள்ள சுமார் ரூ.516 கோடி பட்ஜெட் பற்றாகுறையை விசா கட்டண நிதியின் மூலமாக சரிசெய்யலாமா என பிரதமர் டேவிட் கேமரூன் ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா உள்ளிட்ட வெலி நாடுகளில் இருந்து இங்கிலாந்து வரும் மானவர்கள் மற்றும் வர்த்தகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்கான முயர்சிகளை மேற்கோள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பட்ஜெட்டில் ஏற்பட்டுள்ள பற்றாகுறையை போக்க விசா கட்டணத்தை 4 சதவீதம் வரை  உயர்த்தும் ஆலோசனையும் இங்கிலாந்து அரசின் வசம் உள்ளது.

இங்கிலாந்து அரசின் தற்போதைய இந்த அறிவிப்பின் மூவம் அந்நாட்டில் காணப்படும் பணவீக்க விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக விசா கட்டணம் உயர்த்தப்படும் என தெரிகிறது.

இந்த விசா கட்டணம் உயர்வு காரணமாக இந்துயா, சீனா உள்ளிட்ட நாடுதளில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவர். எனவே விசா கட்டணத்தை உயர்த்தும் கேம்ரூனின் முடிவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

வர்த்தக ரீதியாக இங்கிலாந்து பயணம் செய்யும் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த தொழில் அதிபர்களுக்கு ஏற்கனவே எலைட் திட்டத்தின் கீல் விரைவான விசா வசதி ஏற்படுத்தி தரப்படும் என டேவிட் கேமரூன் அரிவித்துள்ளார். 

இதுகுறித்து குடியேற்றத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் குடியேற்றத்துறையில் செலவுகளை சமாளிப்பதற்காக விசா கட்டணத்தை உயர்த்த ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. எனவே குடியேற்றத்துறையின் கீல் வருபவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்