முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியட்நாமுக்கு அணு உலை: அமெரிக்க அதிபர் ஒப்புதல்

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப்.27 - வியட்நாமுடனான அணு ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அனுமதி அளித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்க அணு சக்தி துறையிடமிருந்து வியட்நாமுக்கு அணு உலைகளும், விற்பனை செய்யப்படும். இதுபற்றி அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:

அணு ஆயுத பரவல் தசு்பபு ஒப்பந்தத்தில் வியட்நாம் கையெழுத்திட்டுள்ளது. அணு உலைக்காக வழங்கப்படும் யுரேனியத்தை செறிவூட்டுவது, அதை மறு சுழற்சி செய்து  ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதில்லை என தெரிவித்துள்ளது.இந்த உறுதிமொழியின் பேரிலேயே வியட்நாமுக்கு அணு உலை வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவி்த்தனர்.

அணு சக்தி துறைக்கு ஒப்பந்தத்தை  பரிந்துரைத்த அதிபர் ஒபாமா இரு தரப்பு ஒப்பந்தமும் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும் என்ற உறுதியான நம்பிக் கையோடு  பரிந்துரை செய்வதாக தெரிவி்த்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் புருணே நாட்டில் நடைபெற்ற கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் இந்த ஒப்ந்த ஷரத்துகள் முடிவு செய்யப்பட்டது. தற்போது எரிசக்தி பற்றாக்குறையால் அணுசக்தியை வியட்நாம்  நாடியுள்ளது. கம்யூனிச நாடைன  வியட்நாம் இதுவரை ரஷியாவுடன்  அணுசக்தி  உடன் பாட்டைகொண்டிருந்தது குளிப்பிடத்தக்கது. 

                           

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்