முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேஷிய கடல் மட்டம் உயர்வு: தீவுகள் அழியும் அபாயம்

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

ஜாகர்த்தா, பிப்.27 - இந்தோனேஷியாவில் கடல்மட்டம் உயர்ந்துள்ளதால் 1500 தீவுகள் அழியும் அபாயம் உள்லதாக விஞ்ஞானிகள் தெரிவி்த்துள்ளனர். உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தோனே ஷியாவில் 1500 தீவுகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 35 ஆண்டுகள் கழித்து 1500 தீவுகள் அழியும் என்று கூறப்படுகிறது. பூமியின் வெப்ப நிலை காரணமாக துருவ நிலை பகுதிகளில் பனிப்படலங்கள் உருகத் தொடங்கி யுள்ளன. இதன் விளைவாக கடல் மட்டம் உயர்கிறது.

இந்தோனேஷியா நாடு தீவுகளால் ஆனது.   இங்கு சுமார் 17 ஆயிரம் தீவுகள் காணப் படுகின்றன. இதில் 6 ஆயிரம் தீவுகள் வசிக்கத் தகுதியற்றவை. இதுபற்றி  சுற்றுச்சூழல் ஆய்வாளர்  அஞ்சா சீனிவாசன் கூறியதாவது: 

ஜாகர்த்தா உள்பட 40 சதவீத  நிலப்பரப்பு தாழ்வாக உள்ளது. இதுவே அந்த நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள குளோபல் வார்மிங் என்ற பருவ வெப்ப  றுபாடு  காரணமாக கடல் மட்டம் அதிகரித்து வருகிறது. இங்கு சுமார் 40 மில்லியன்  மக்கள் கடலுக்கு மிக அருகிலேயே வசித்து வருகின்றனர் என்றார்.

         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்