முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல் எரிவாயு-டீசல் விலை அடுத்த மாதம் உயர்கிறது

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி,மே.27 - சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் அடுத்த மாதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கே மத்திய அரசு தாரை வார்த்ததை அடுத்து அவற்றின் விலைகள் அடிக்கடி உயர்த்தப்படுகின்றன. குறிப்பாக, பெட்ரோல் விலை ஓயாமல் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு லிட்டருக்கு ரூ. 5 வீதம் உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் எந்த பலனுமில்லை. 

இந்த நிலையில் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளையும் உயர்த்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டீசல் விலை உயர்த்தப்பட்டால் உயர்த்தும் நாள் முதல் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் வெடிக்கும் என்று அகில இந்திய மோட்டார் காங்கிரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் மத்திய அரசோ அல்லது எண்ணெய் கம்பெனிகளோ அதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. 

டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அடுத்த மாதம் முதல் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. இது பற்றி முடிவெடுக்க மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு ஜூன் 9 ம் தேதி கூடி ஒரு முடிவெடுக்கும் என்று டெல்லியில் சம்பந்தப்பட்ட அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து அதை ஈடுகட்ட டீசல், எரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்துவதை தவிர வேறு வழியே இல்லை என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக முடிவெடுக்க அமைச்சர்கள் குழு 9 ம் தேதி கூடுவதால் அதற்கு பிறகு விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்