முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.விவகாரம்: போலீஸ் சூப்பிரண்டு சஸ்பெண்டு

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.1 - ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டெல்லியிலும், சென்னையிலும் கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் சிக்கினார்கள். தரகர்களிடம் தொடர்பு வைத்து இருந்த இந்திய கிரிக்கெட் முன்னணி வீரர் ஸ்ரீசாந்த் உட்பட 3 வீரர்கள் சிக்கினர்.

சென்னையில் பிரபல ஓட்டல் அதிபர் விக்ரம் அகவர்வால், தரகர் கிட்டி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை தற்போது கோர்ட்டு நிலையில் உள்ளது.

ஏற்கனவே தேசிய அளவில் ஐ.பி.எல். சூதாட்டம் நடந்ததாக நீதிபதி முட்கல் தலைமையிலான 3 பேர் கமிட்டி விசாரணையை நடத்தியது. இந்த கமிட்டி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

அதில் ஐ.பி.எல். விவகாரம் தொடர்பாக சரியான அளவில் போலீசார் விசாரணை நடத்தவில்லை என்றும், இது தொடர்பாக மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் சென்னையில் பிடிபட்ட தரகர்களிடம் முதலில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய சம்பத்குமார் மீது சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்த புகார் குறித்தும் விசாரிக்கப்பட்டது.

இந்த நிலையில் போலீஸ் அதிகாரி சம்பத்குமார் நேற்றுமுன்தினம்  சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

ஐ.பி.எல். அதிகாரியான இவர் சென்னை புளியந்தோப்பு துணைக் கமிஷன ராகவும், கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது திருச்சி ரெயில்வே சூப்பிரண்டாக பணியில் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago