முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் தடுப்பு மசோதாக்கள்: ஒத்தி வைத்தது மத்திய அரசு

சனிக்கிழமை, 1 மார்ச் 2014      ஊழல்
Image Unavailable

     

புதுடெல்லி, மார்ச்.,2 - ஊழல் தடுப்பு மசோதாக்களை அவசரச் சட்டம் மூலம் அமல்படுத்துவது தொடர் பான விவகாரத்தை மத்திய அமைச்சரவை  ஒத்திவைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக  அடுத்த வாரம் மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் கூடி ஆலோசனை நடத்தும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளு மன்றத்தில் நிலுவையில் உள்ள ஊழல் தடுப்பு மசோதாக்கள் அவசதர சட்டத்தின் மூலம் அமல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி  கூறியிருந்தார். இதுகுறித்து இனிமேல் கூடும் மத்திய அமைச்சரவை  கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.                 

ஆனால் அமைச்சரவைக் கூட்டம் கூடியது ம் நிகழ்ச்சி நிரலை வாசித்த அமைச்சரவை செயலர் அஜித் சேத், அவசர சட்டம் தொடர்பான விவாதம் தள்ளி வைக்கப் படுகிறது என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து 2 மணி நேரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல் உள்ளிட்ட  பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் ராகுல் காந்தி வற்புறுத்தும் அவசர சட்டம் தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை. 

ஊழல் தடுப்பு சட்ட திருத்த மசோதாவும், சரக்கு சேவை மற்றும் குறை தீர்ப்பை குறிப்பிட்ட காலவறைக்குள் பெறும் மசோதா உள்பட 6 மசோதாக்களையும் அவசர சட்டம் கொண்டு வந்து  அமல்படுத்துவது குறித்து பதிலளி்க்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு மத்திய சட்ட அமைச்சகம் குறிப்பு அனுப்பியுள்ளதாக  தகவல்கள் தெரிவி்க்கின்றன. மத்திய அரசு கொண்டுவரும் அவசர சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் அதை சட்ட ரீதியாகவும் நிலைநாட்ட இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக  அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 

அவசர சட்டம் குறித்து அண்மையில் கருத்து தெரிவி்த்திருந்த ராகுல் காந்தி  அவர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக சோனியா காந்தி, மன்மோகன்சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன். அது அமல்படுத்தப்படுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

பொது விநியோக கொள்முதல், மசோதா, வெளிநாட்டு அதிகாரிகளின் லஞ்சத்தை தடுக்கும் மசோதா உள்ளிட்ட 6 மசோதாக்களை நிறைவேற்ற ராகுல் காந்தி ஆதரவு தெரிவி்த்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்